வாளை காட்டிய மிரட்டிய பெண் சாமியார்

வாளை காட்டிய மிரட்டிய பெண் சாமியார் ! மிரண்ட போலீசார் ! விதியை மீறி கூட்டம் கூட்டிய ஆசிரமத்துக்கு சீல் !! கைது செய்த உ.பி. போலிஸ்!

அட்ராசக்க ஆன்மீகம் தேசிய செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு.

விதியை மீறி கூட்டம் கூட்டிய ஆன்மிகவாதி.. ஆசிரமத்துக்கு சீல் வைத்து பெண் சாமியாரை கைது செய்த உ.பி. போலிஸ்!

இப்படி இருக்கையில், உத்தர பிரதேச மாநிலத்தின், தியோரியா என்ற பகுதியில் ‘மா ஆதி சக்தி’ என்ற பெண் சாமியார் ஒருவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டில் 50க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பிரார்த்தனை கூட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து, விரைந்த உத்தர பிரதேச போலிஸார் அங்கு குழுமி இருந்தவர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அந்த பெண் சாமியாரோ போலிஸாரை நோக்கி வாளை நீட்டி பதிலுக்கு ஆவேசமாகப் பேசியுள்ளார்.

Coronavirus Lockdown: Uttar Pradesh Godwoman Brandishes Sword ...

இதனால் கோபமடைந்த போலிஸார் அங்கு லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தி பெண் சாமியாரை கைது செய்தனர்.

அதோடு மட்டுமல்லாமல், மா ஆதி சக்தியின் ஆசிரமத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மத நிகழ்ச்சியில் பலருடன் கலந்து கொண்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.