நடுவானில் பிறந்த குழந்தை: ஆனால் எந்த நாட்டுக் குடிமகன் ? ருசிகரம் !!

உலக செய்திகள் சுட சுட செய்திகள்

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்திய வான்பரப்பில் கர்ப்பிணி ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இந்த குழந்தைக்குக் கத்தார் குடியுரிமை வழங்கப்படுமா அல்லது இந்திய வான்பரப்பில் பிறந்ததால் இந்திய குடியுரிமை வழங்கப்படுமா அல்லது தாய்லாந்து குடியுரிமை வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு,கத்தார் ஏர்வேஸ் விமானம், 352 பயணிகளுடன் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. நேற்று அதிகாலை, இந்திய வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்திலிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க வசனா ப்ரோமசிகார்ன் என்ற கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 2.15 மணியளவில் விமானத்தின் பணி பெண்களின் உதவியுடன் அந்த பெண் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்திய வான் பரப்பில் விமானம் சென்று கொண்டிருக்கும் போது குழந்தை பிறந்ததை அடுத்து அந்த விமானம் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் 3.15 மணியளவில் தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள சர்நோக் மருத்துமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
Image result for baby born to thai mom flying"

இந்தநிலையில் அக்குழந்தைக்கு எந்தநாட்டுக் குடியுரிமை வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக இதுபோன்று விமானத்தில் நடுவானில் குழந்தை பிறக்கும்போது அந்த விமானம் பதிவு செய்யப்பட்ட நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். இல்லையெனில் எந்த நாட்டின் வான்பரப்பில் பறக்கிறதோ அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும் அல்லது எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.

”இந்திய அரசியலமைப்பின் 5ஆவது பிரிவு இந்தியத் தேசத்தில் பிறந்த எவருக்கும் இந்தியக் குடியுரிமை கோர அனுமதிக்கிறது. ஆனால் தற்போது கத்தார் ஏர்வேஸில் பிறந்த குழந்தைக்கு, அவருடைய தாய் (தாயின் விருப்பப்படி) தாய்லாந்து என்பதால் அந்நாட்டுக் குடியுரிமையும் வழங்கப்படலாம். அவரது சொந்தநாடான தாய்லாந்து குடியுரிமை வழங்கப்படலாம். எனவே அவருடைய முடிவுதான் இந்த குழந்தைக்கான குடியுரிமையைத் தீர்மானிக்கிறது” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞரான அனிர்பன் குஹா தகுர்தா தெரிவித்தார்.