CORONA ALERT: ICMR பரிந்துரைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு! – பரப்புங்கள்

உலக செய்திகள் கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள் தொழில்நுட்பம்

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரைத்த மருந்தை உட்கொள்வதால் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துவிட முடியுமா என்பதை விளக்கும் பதிவு.

கொரோனா வைரஸுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை உபயோகிக்கச் சொல்லி பரிந்துரை செய்தது.

இதனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர். மேலும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா தாக்கினாலும் குணமாகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள்.

CoronaAlert: ICMR பரிந்துரைத்த மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு!

இதுமட்டுமல்லாமல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் மருந்தகங்களில் சுயமாக சென்று இந்த மருந்தை வாங்கியும் வைத்துக்கொள்ள முற்படுகிறார்கள்.

இந்த மருந்தை வாங்குவதன் மூலம் பற்றாக்குறையே ஏற்படுமேயன்றி, வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு விடமுடியாது என மருத்துவர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கும், மருத்துவ பணியாளர்களுக்குமே வழங்க இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.

நோய்த்தாக்கம் ஏற்படாதவர்கள் இதனை உட்கொள்ளவேண்டும் என பரிந்துரைக்கவில்லை.

மருத்துவரின் பதிவு :

இப்போ நம்ம ஆளுங்க எல்லாம் கூட்டம் கூட்டமா மெடிக்கல் ஷாப் போய்ட்டு அந்த ‘Chloroquine’ மாத்திரை ஒரு அட்டை குடுயா ன்னு கேட்டு வாங்க வேண்டாம்.

Chloroquine என்பது நமது நாட்டில் மலேரியா நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சிறந்த மருந்து.

இது கொரோனா கிருமித்தொற்றில் பயன்படும் என்று கருதப்படுகிறது. வைரஸ் வாழத்தேவையான Acidic pH நிலையை இது மாற்றம் செய்து வைரஸ் மனித உடலில் வாழ்வதை தடுக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், தீர்க்கமாக முடிவு செய்யப்படவில்லை.

நைஜீரியா நாட்டில் இது போன்று ‘கொரோனாவை கொல்லும் க்ளோரோகுயின்’ என்று மக்கள் நம்பி இஷ்டத்திற்கு மருத்துவர்களின் ஆலோசனையின்றி உட்கொண்டு “CHLOROQUINE POISONING” க்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார மையமும், CDC எனப்படும் Centre of Disease control and Prevention இந்த Chloroquine மருந்தே கொரோனாவிற்கு தீர்வு என்று அறிவிக்கவில்லை. இந்த மருந்தை முன்பே உட்கொண்டால் கொரோனாவில் இருந்து தப்பித்து விடலாம் என்பதும் நிரூபணம் செய்யப்படவில்லை.

தற்போது ICMR கொரோனாவால் பாதித்த மக்களுக்கும், மருத்துத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் இதை வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. சாதாரண மக்கள் யாரும் உட்கொள்ள அறிவுரை செய்யவில்லை.

ஆகவே, தற்போது மக்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று ‘SOCIAL DISTANCING’ என்னும் சமூகத்திலிருந்து தங்களை துண்டித்து தனிமைப்படுத்திக்கொள்வது தான். நீங்கள் அதை செய்தால் மட்டும் போதும்.

மாஸ்க், சானிடைசர் போன்று இதையும் வாங்கி குவிக்கும் எண்ணம் இருந்தால் குழிதோண்டி புதைத்து விடவும்.

முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் அமைதியாக இருக்கவும்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே மருந்து சமூக பரவலை ஏற்படுத்தாமல் இருப்பது மட்டுமேயாகும். மாஸ்க், சேனிடைசர் போன்று இந்த மருந்தையும் வாங்கிக் குவித்து, மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் உட்கொண்டால் பின்விளைவுகளே ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்,