November 24, 2020

Adrasakka

#1 Tamil News Website

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” : தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டான #TNGOVTDISMISS_SURAPPA ! – விரிவான ரிப்போர்ட் !!

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” : தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டான #TNGOVTDISMISS_SURAPPA !

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

தமிழகத்தில் தலைசிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் அ.தி.மு.க ஆட்சியில் தனது மதிப்பை இழந்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பா.ஜ.க, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பல மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பா.ஜ.கவினரால் தமிழகத்திற்கு நியமிக்கப்பட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்திற்குள் நுழைந்த பிறகு மாநில அரசுக்கும், மக்களுக்கும் எதிராகச் செயல்படத் துவங்கினார். அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களின் அனுமதின்றி பல மாவட்டங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

அதனால் பல்வேறு சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புக்கும் ஆளான பன்வாரிலால், அண்ணா பல்கலைக்கழக நியமனத்தில் தன்னிச்சையாக செயல்படத்துவங்கினார்.

தமிழகத்தில் திறமையான பேராசிரியர்கள் பலர் இருந்தபோதும், தன் பேச்சைக் கேட்கும் ஆள்வேண்டும் என்பதற்காக கர்நாடக மாநிலத்தில் இருந்த, எம்.கே.சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தார்.

அதேபோல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சூரியநாராயண சாஸ்திரி என்ற ஆந்திராவைச் சேர்ந்தவரை நியமனம் செய்தார்.

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” : தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டான #TNgovtDismiss_Surappa !

ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு பா.ஜ.க அரசிடம் சிக்கிக்கொண்ட அ.தி.மு.க அரசும் இத்தகைய நடவடிக்கைகளை துளியும் கண்டுகொள்ளவில்லை.

அதேவேளையில் மாநில உரிமைகளை பறிக்கு பா.ஜ.க அரசுக்கும், அதற்கு துணையான அ.தி.மு.க அரசுக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க.

இந்த நிலையில், பதவியேற்று இருக்கையில் அமர்ந்த சூரப்பா, பல்கலைக்கழக பாடத்திட்டம், தேர்வு முறை, மாநில அரசை மீறி மத்திய அரசிடம் சலுகை பெற முயற்சி என பலவற்றைத் தனிச்சையாக செய்யத்தொடங்கினார்.

ஆரம்பம் முதலே கண்டிக்காமல் விட்டதால், சூரப்பாவை அ.தி.மு.க அரசால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

அரியர் மாணவர்களின் தேர்சி விவகாரங்களில் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு கடிதம் எழுதினார் சூரப்பா.

இதற்கு பெயரளவில் கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க அமைச்சர்கள் தற்போது வரை கடித்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க முன்வரவில்லை.

அதேபோல் தமிழக அரசின் கட்டுப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கும் மத்திய அரசோடு சூரப்பா பேசியுள்ளார்.

சூரப்பாவின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகே, போகிற போக்கில் தனது கண்டத்தைத் தெரிவித்தது எடப்பாடி அரசு.

ஆனால் சூரப்பா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க தலைமையில் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு பல அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரே குற்றம்சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வை பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது.

முன்னதாக, இந்த தேர்வை நடத்துவதற்கு சுமார் 9.25 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.

இதில் டெண்டரை பெங்களூரு நிறுவனம் பெறவேண்டும் என்பதற்காக துணைவேந்தர் சில வேலைகளைப் பார்த்துள்ளார்.

அதன்மூலம் பல கோடி ரூபாய் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

“சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க” : தேசிய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டான #TNgovtDismiss_Surappa !

அதுமட்டுமல்லாது ஐ.ஐ.டியில் பணியாற்றிய தனது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில், கௌரவ பதவி வழங்கியிருக்கிறார். பல்கலைக்கழத்தில் பல தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கும் சூரப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களை மதிப்பதே இல்லை” எனத் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து வெளியான தகவலில், 280 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் ஒன்பது மாதங்களாக இந்த புகார எழுந்த நிலையில், தற்போது, சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

TNgovtDismiss_Surappa Twitter Trend : Most Popular Tweets | India

விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட நிலையில், சூரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்து,

ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில்,

“அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீது பகிரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்த பின்னரும் தமிழக அரசு அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யாமல் இருப்பது ஏன்? திரைமறைவுப் பேரம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தற்போது, சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பதவியில் உள்ள நிலையில் விசாரணையை மேற்கொள்வது சரியாக இருக்காது என கருத்து நிலவுவதால் தமிழக அரசு சூரப்பாவை நீக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top