July 13, 2020

Adrasakka

#1 Tamil News Website

“தனியார் தொலைகாட்சிகளுக்கு ‘ஷாக்’ இனி அனைத்தும் அமித் ஷா கையில்!”

தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மாற்றியமைத்து வெளியிட்டிருக்கிறது.

கொரோனா பரபரப்பில் நாடும், ஊடகங்களும் இருக்கும் நிலையில் மத்திய அரசு சில முக்கியமான விவகாரங்களில் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 30 ஆம் தேதி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தனியார் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டு,

இவை மீதான கருத்துகளை மே 15 ஆம் தேதிக்குள் அமைச்சகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இதுவரையிலான விதிமுறைகளின்படி சேனல்களுக்கான பாதுகாப்பு அனுமதி (security clearance) பத்து வருடங்கள் வரை நீடித்திருக்கும்.

ஆனால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனியார் சேனல்களில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய முடியும்.

அதற்கு முன் தொடர்புடைய சேனலிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அந்த வழிகாட்டும் நெறிமுறை கூறுகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஒளிபரப்பு தொழில்நுட்பம், சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டதாக சொல்கிறது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்.

ஆனால் தனியார் செயற்கைக் கோள் செய்தி சேனல்களை அரசின் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுக்குள் வைக்கும் நோக்கிலேயே

இந்த புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சேட்டிலைட் சேனல் ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

“ புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு சேனலின் இரட்டை லோகோவை பயன்படுத்தினால் 30 நாட்களுக்கு ஒளிபரப்புவதைத் தடைசெய்வது முதல்,

அந்த சேனலுக்கான நேரடி ஒளிபரப்பு உரிமை ஆறு மாதங்கள் வரை நிறுத்தப்படும். மேலும் ஒரு தனியார் சேட்டிலைட் சேனல் நிர்வாகத்தில்

இயக்குநர்கள் மாற்றம் அல்லது ஒரு புதிய நிர்வாகியை நியமித்தல், பங்குதாரர்கள் மாற்றம் அல்லது ஒரு சேனலை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் வாங்குவது போன்ற சூழல்களில் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.

இதன் மூலம் சேனல்களின் நிர்வாகத்தில் அரசு முழுமையாக தலையிடும் நிலை ஏற்படும்.

இந்த புதிய வழிகாட்டுதல்களில் தகவல் ஒலிபரப்புத் துறையை விட உள்துறைக்கே அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது.

ஆக இந்த வழிகாட்டுதல் அமலுக்கு வரும்போது அமித் ஷா நினைக்காமல் இனி ஒரு சேனல் செயல்பட முடியாது.

தொடங்க முடியாது, நிர்வாகிகளை மாற்ற முடியாது என்ற நிலையே உருவாகியிருக்கும்” என்கிறார்கள் சேனல் நிர்வாகிகள்.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top