November 26, 2020

Adrasakka

#1 Tamil News Website

‘550 ஆண்டு பழமையான பள்ளிவாசல்’-முஸ்லிம்களிடம் மீட்டு கொடுத்த சீக்கியர்கள்: மலர்ந்த மத நல்லிணக்கம்!

பள்ளிவாசல்

பஞ்சாப் – கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் சுல்தான்பூர் லோதியில் 550 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலில் இந்திய சுதந்திரத்திற்கு பின் முஸ்லிம்கள் முதல் முறையாக அந்த பள்ளிவாசல் ‘லில் பிரார்த்தனை செய்தனர்.

சீக்கிய சமூகத்தவர்கள் ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ள அந்த அழகான பள்ளிவாசலை சரிசெய்து, முஸ்லிம் களை வரவேற்றனர்.

சீக்கிய மரபுகளின்படி, சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் இந்த பள்ளிவாசலில் பிரார்த்தனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிவாசல் பின்னணி :

கிழக்கு பஞ்சாபில் இருந்து முஸ்லிம்கள் பாக்கிஸ்தானில் மேற்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தபோது சரியாக 1947ஆம் ஆண்டு நடந்த பிரிவினையின் போது அதிகமான வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

அந்த வகுப்புவாத வன்முறை காரணமாக இழக்கப்பட்ட பல முஸ்லீம்களின் பள்ளிவாசல்களில் இந்த பள்ளிவாசலும் ஒன்றாகும்.

இந்நிலையில், மீண்டும் அந்த பள்ளிவாசலை சரிசெய்து கடந்த நவம்பர் 13 ம் தேதி, சீக்கியர்களும் முஸ்லிம்களும் இணைந்து பள்ளிவாசலை மீண்டும் திறந்தனர்.

பள்ளிவாசல்
பள்ளிவாசலின் தோற்றம்

மீண்டும் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் இரு சமூகத்தவர்களும் இணைத்து ஒரு கூட்டு நிகழ்வை நடத்தினர்.

அந்த நிகழ்வில், சீக்கியர்கள் முஸ்லீம் பங்கேற்பாளர்களிடையே இனிப்புகளையும் விநியோகித்தனர்.

பள்ளிவாசலை திறக்க சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த சந்த் சுக்தேவ் சிங் மற்றும் சந்த் பல்பீர் சிங் ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.

பல்பீர் சிங்க் என்பவர் இப்பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளை சிறப்பாக செய்துவருபவர்.

சீக்கியர்-முஸ்லிம்களின் ஒற்றுமை

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-பஞ்சாப் தலைவர் அப்துல் ஷகூர் கலந்து கொண்டு குருநானக்கின் வாழ்க்கை முறை குறித்து பேசினார். அவருடன் மவுலானா யஸ்தானி, டாக்டர் இர்ஷாத் மற்றும் டாக்டர் ஷாஜாத் ஆகியோர் வந்தனர்.

“குருநானக்கின் 550 வது பிறந்தநாளைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது” என்று ஷகூர் தனது உரையில் கூறினார்.

திறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற சொற்பொழிவு

“குருநானக் முஸ்லிம்களிடையே வாழ்ந்தார்; அவரது சிறந்த நண்பரும் ஒரு முஸ்லீம். முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஒருவருக்கொருவர் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர். ”

சீக்கிய சமூகத்தின் தலைவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாகவே இப்பள்ளிவாசல் திறக்கப்பட்டது என்று ஷகூர் கூறினார்.

“அவர்கள் எங்களை அணுகி பள்ளிவாசலை பழுதுபார்க்கும் பணிகளை செய்து நாங்கள் முஸ்லிம்களுக்காக இந்த பள்ளிவாசலை திறக்க விரும்புகிறோம் என்று சொன்னார்கள்.” என தெரிவித்தார்.

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது வாழ்க்கையின் 14 ஆண்டுகளை சுல்தான்பூர் லோதியில் கழித்தார்.

கடந்த ஆண்டு, குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு பஞ்சாப் அரசு ஒரு வார கால மெகா நிகழ்ச்சிகளை நடத்தியது.

அந்த வாரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களிடையே பதட்டங்கள் இருந்தபோதிலும், சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள கர்தார்பூரில் ஒரு முக்கியமான குருத்வாராவைப் பார்க்க அனுமதிக்கும் எல்லைத் தாழ்வாரத்தைத் திறந்தனர்.

நிகழ்வுக்குப் பிறகு முஸ்லிம்கள் நன்றி செலுத்தும் பிரார்த்தனை நடத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மலேர்கோட்லாவைச் சேர்ந்த சீக்கியர்களும் முஸ்லிம்களும் சுல்தான்பூரை அடைந்திருந்தனர்.

பாகிஸ்தான் துணைக் கண்டத்தைப் பிரித்த போது நடந்த வகுப்புவாத வன்முறைகள் பஞ்சாப் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தின.

பாகிஸ்தானின் மேற்குப் பகுதிக்கு சில முஸ்லிம்கள் குடியேறியதால் இழக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்கள் முஸ்லிமல்லாதவர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தன.

இருப்பினும், கடந்த பல ஆண்டுகளில், பல பள்ளிவாசல்கள் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இரு சமூகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வுக்குப் பிறகு அவை பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

அந்த நிகழ்ச்சியில் பேசிய முஸ்லிம் ஜமாஅத் பொறியாளர் சலீம்,

இது “பஞ்சாபில் உள்ள எங்கள் சீக்கிய சகோதரர்களிடமிருந்து நாடு முழுவதும் மற்றும் உலகளவில் ஒரு நற்செய்தியை வழங்குகிறது,

ஒரு நேரத்தில் சில குழுக்கள் முஸ்லீம்-விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றன அதோடு இஸ்லாமியர்களின் இறையில்லங்களை குறிவைக்கின்றன.”

சீக்கியர்களிடமிருந்து வந்த இந்த செயல் நாட்டில் மத நல்லிணக்கத்தை மென்மேலும் வளர்க்க உதவும் என்று சலீம் கூறினார்.

பஞ்சாப் சீக்கியர்களின் இந்த செயல் மத நல்லிணக்கதை இந்தியாவில் மலர வைத்திருக்கிறது.

இதையும் படிங்க:

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top