பாபர் மஸ்ஜித் உயர்நீதிமன்ற தீர்ப்பு : இந்தியாவில் முதல் ஆர்ப்பாட்டம், தலைநகர் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு !!

TRENDING NOW தமிழகம்

பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கு கடந்த (09/11/19) தேதியில் தீர்ப்பு உயர்நீதிமன்றம் வெளியிட்டது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து வந்தார்கள். வழக்கமாக அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தவை தொடர்ந்து , குறிப்பாக தமிழகத்திலும் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் , மே 14 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர்களும் கூட பாபர் மஸ்ஜித் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழகத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில நிர்வாகிகள் நேற்றைய தினம் கூட பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குறித்த கண்டனத்தை வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அடுத்த கட்டமாக ,

இந்தியாவிலேயே தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பாபர் மஸ்ஜித் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும் மேலும் சட்டத்தை மறுத்து நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் அதனுடைய ஆர்ப்பாட்ட அறிவிப்பை அந்த ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வழியாக வெளியிட்டு இருக்கிறது.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு இமேஜ் :