September 23, 2020

Adrasakka

#1 Tamil News Website

வாரத்தில் 4 வேலைநாட்கள்: 40% எகிறிய Microsoft-ன் உற்பத்தி திறன்! கைமேல் பலன்!

சோதனை அடிப்படையில் வேலைநாட்களின் எண்ணிக்கையை 4 நாட்களாக குறைத்ததற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

“Work Life Choice Challenge 2019 Summer” என்ற திட்டத்தின் அடிப்படையில் பணிநாட்களின் எண்ணிக்கையை 4 நாட்களாக குறைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சோதனை செய்தது பிரபல மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இதன் அடிப்படையில் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் நிறுவனத்தின் உற்பத்தி திறன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 39.9% உயர்ந்திருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி மைரோசாஃப்டின் ஜப்பான் கிளையில் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது.

மீட்டிங் நேரம் குறைப்பு:

இந்த சோதனை முயற்சியின் போது அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளின் நேர அளவும் அதிகபட்சம் 30 நிமிடங்களாக நடத்தப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

வேலை மற்றும் வாழ்க்கை இரண்டையும் சரிவிகித அளவில் கொண்டு சென்று, மாற்றிக்கொள்ளக்கூடிய பணி நேரங்களை ஊழியர்களுக்கு அளிப்பதன் மூலம் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்திக்கொள்வதே இந்த “Work Life Choice Challenge 2019 Summer” திட்டத்தின் நோக்கம் என்று மைக்ரோசாஃட் தெரிவித்துள்ளது.

எனினும், மைக்ரோசாஃப்ட் மட்டுமே இதுபோன்ற ஒரு சோதனையில் ஈடுபடவில்லை என்று தெரியவந்துள்ளது, நியூசிலாந்தை சேர்ந்த Perpetual Garden என்ற நிறுவனம் இதுபோன்ற 4 வேலைநாட்கள் சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது ஊழியர்கள், நிறுவனம் என இருதரப்புக்கும் பலன் கிடைத்ததாகவும், இதன் பின்னர் நிரந்தரமாக தங்கள் நிறுவனத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருந்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் Andrew Barnes தெரிவித்துள்ளார்.

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top