November 24, 2020

Adrasakka

#1 Tamil News Website

ஜெ திட்டத்தை அமித் ஷா நாட்டுக்கு அர்ப்பணிப்பதா? – வலுக்கும் கண்டனம் !!

ஜெ திட்டத்தை அமித் ஷா நாட்டுக்கு அர்ப்பணிப்பதா? - வலுக்கும் கண்டனம் !!

தேர்வாய் கண்டிகை அணையை அமித் ஷா திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்துக்கு வரும் 21ஆம் தேதி வரும் உள் துறை அமைச்சர் அமித் ஷா, அரசு சார்ந்த மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.380 கோடியில் கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தைப் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

வடகிழக்கு பருவமழையின்போது சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும். அப்போது வரும் கிருஷ்ணா நீர் முழுவதும் கடலில் வீணாகப் போய் கலக்கும்.

அதுபோன்ற காலங்களில் கிருஷ்ணா நதி நீரை தேக்கிவைத்து சென்னை மாநகரக் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்துவதற்காக தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு, 330 கோடி ரூபாய் மதிப்பில், 2013 செப்டம்பரில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். நீர் தேக்கத்துக்கான நிலம் கையகப்படுத்த கூடுதலாகச் செலவானதால் திட்டத்தின் மதிப்பீடு 380 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா தொடங்கிவைத்த திட்டத்தை அமித் ஷா நாட்டுக்கு அர்ப்பணிப்பதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

சூழலியலாளரும், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவருமான சுந்தர்ராஜன், “சென்னையின் அதிகரிக்கும் குடிநீர் தேவையை உணர்ந்து புதிய நீர் தேக்கத்தை தேர்வாய் கண்டிகையில் உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

அவர் அண்டாத பாஜக அமைச்சரை வைத்து நீர்நிலையை அர்ப்பணிக்கச் செய்கிறது அவர் பெயரால் நடக்கும் அரசு” என முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நீங்களே இந்த நீர்நிலையை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்திருந்தால் மெரினா கடற்கரையில் துயிலும் ஜெயலலிதா மகிழ்ந்திருப்பார். உங்களை மனம் குளிர வாழ்த்தியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top