July 13, 2020

Adrasakka

#1 Tamil News Website

நிதியமைச்சர் நிர்மலா மாற்றப்படுகிறாரா? – அதிர்ச்சி தகவல் !! – பீதியில் நிர்மலா சீதாராமன் !!

நிதியமைச்சர் நிர்மலா மாற்றப்படுகிறாரா? - அதிர்ச்சி தகவல் !! - பீதியில் நிர்மலா சீதாராமன் !!

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட இருப்பதாக நேற்று முதல் தகவல்கள் பரவி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியில் நிதித் துறை என்ற மிக முக்கியமான சவாலான பொறுப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்.

ஆனால் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைகள் பாஜகவுக்குள்ளேயே சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தத் துறை அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய நிதியமைச்சராக கே.வி.காமத் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி, இந்தியா முழுதும் அரசியல் வட்டாரங்களில் இதுவே பேச்சாக இருக்கிறது.

இந்த விவாதத்துக்கு வித்திட்டவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம்.

மே 30ஆம் தேதி தனது ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம், “A little birdie tells me that “cometh” the hour in North Block” என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது, ‘காமத் தான் அடுத்து நார்த் பிளாக் (நிதியமைச்சகம் அமைந்திருக்கும் அலுவலகம்) வரப் போகிறார் என்று பட்சி ஒன்று என்னிடம் சொன்னது’ என்பதே கார்த்தியின் ட்விட்.

இதை வைத்துதான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் தற்போது பிரிக்ஸ் வங்கியில் இருந்து ஓய்வுபெற்ற கே.வி. காமத் புதிய நிதியமைச்சராகப் போகிறார் என்று தகவல்கள் றெக்கை கட்டிப் பறந்து வருகின்றன.

கே.வி.காமத், மூத்த வங்கியாளர் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.

காமத் பிரிக்ஸ் அமைப்பின் (வளர்ந்து வரும் தேசிய பொருளாதாரங்களின் சங்கம்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக இருந்தார்.

Bengaluru: Kundapur Vaman Kamath tipped to be next finance ...

கடந்த வாரம் அந்த வங்கியின் தலைவர் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து அந்த இடத்தில், பிரேசிலின் முன்னாள் துணை பொருளாதார அமைச்சர் மார்கோஸ் பிராடோ ட்ராய்ஜோ நியமிக்கப்பட்டார்.

மே 11, 2015 அன்று பிரிக்ஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட காமத், அவ்வங்கியில் பல சீர்திருத்த நடவடிகைகளை மேற்கொண்டார்.

பிரிக்ஸ் வங்கியின் தலைவர் பதவிக் காலம் முடிந்த நிலையில் காமத் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பின் அடிப்படையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு பதிலாக, காமத் புதிய நிதியமைச்சர் ஆகிறார் என்ற செய்திகளுக்கு முகாந்திரம் அதிகமாகியிருக்கிறது.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top