July 13, 2020

Adrasakka

#1 Tamil News Website

பசு மாட்டின் பாலில் தங்கம்; வெளிநாட்டு மாடுகள் ஆண்டிகள்! பா.ஜ.க தலைவர் கண்டுபிடிப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், பர்த்வானிலுள்ள ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்தியாவிலுள்ள பசுமாட்டின் பாலில் தங்கம் உள்ளது. அதனால், பாலில் மஞ்சள் நிறம் உள்ளது. வெளிநாட்டு மாடுகளுக்கு இத்தகைய தன்மைகள் கிடையாது. இந்திய பசு மாடுகளுக்கு திமில்கள் உள்ளன. வெளிநாட்டு மாடுகளுக்கு திமில்கள் கிடையாது.

Dilip Ghosh, BJP West Bengal President: Indian breed of cows has a special characteristic, there is gold mixed in its milk, & that is why colour of their milk is slightly yellow. Cow’s navel helps in producing gold with help of sunshine. (4.11.19)

View image on Twitter
 அதில், உள்ள சுரப்பி சூரிய ஒளிபடும் போது தங்கத்தை உற்பத்தி செய்கிறது. பாலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளன. இந்த வகையான பாலைக் குடித்து மட்டுமே மனிதர்கள் உயிர் வாழ முடியும். வெளிநாட்டு மாடுகள் நம்முடைய பசுமாதா இல்லை. அவைகள் நம்முடைய ஆண்டிகள். பசுவை உண்பவர்கள் நாய்க் கறியையும் உண்ண வேண்டும். பசுவைக் கொல்வதும் அவமதிப்பதும் இந்தியாவில் மிகப் பெரும் குற்றம். அவர்களை சமூக எதிரிகள் என்று அழைக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’என்று தெரிவித்தார்

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top