இதை செய்தால் மட்டுமே ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – மூத்த சீன மருத்துவர் அதிரடி!

உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சீனாவின் மூத்த அரசு மருத்துவர் பேட்டி அளித்துள்ளார்.

உலகின் 160க்கும் மேலான நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது கோவிட் 19 எனும் உயிர்க்கொல்லி நோய். இதனால் உலக அளவில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகியிருக்கின்றார்.

இதில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவையும் மிஞ்சிய இத்தாலி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்.

ஏனெனில், அந்த நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை என்றும், மக்கள் கொரோனாவின் பாதிப்பை உணராமல் இருப்பதும்தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதை செய்தால் மட்டுமே ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் -  மூத்த சீன மருத்துவர் அதிரடி!

இந்நிலையில், சீன நாட்டின் மூத்த அரசு மருத்துவ ஆலோசகரும், தொற்றுநோய் தடுப்பு நிபுணருமான (83) ஜோங் நான்ஷன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு நல்குமாயின் வருகிற ஜூன் மாதத்திற்குள் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து குணமடையச் செய்ய முடியும்.

ஆனால், சில நாடுகளில் இந்த தொற்றுநோய் பாதிப்பை எளிதாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் பல நாட்களுக்கு கொரோனாவின் தாக்கம் நீடிக்கும்.

இதை செய்தால் மட்டுமே ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் -  மூத்த சீன மருத்துவர் அதிரடி!

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படியும், வழிகாட்டுதலின் படியும் அனைத்து நாட்டு அரசும் கொரோனா பாதிப்பை கையாள வேண்டும். எனக் ஜோன் நான்ஷன் கூறியுள்ளார். இவர், முன்னதாக 2003ம் ஆண்டில் வந்த சார்ஸ் நோயை கட்டுப்படுத்த பெரும் உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.