November 24, 2020

Adrasakka

#1 Tamil News Website

அமித் ஷா மீது பதாகை வீச முயற்சி; சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அமித் ஷா மீது ஒருவர் பதாகையை எறிய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தை விட்டு காரில் வெளியேறிய அமித் ஷா திடீரென்று காரை பாதியில் நிறுத்தி நடைபயணம் செய்தார்.

சாலையின் ஓரத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார்.

அவருக்கு பாஜக, அதிமுக தொண்டர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒருவர் அமித்ஷா மீது பதாகையை தூக்கி வீச முயன்றார்.

வீடியோ:

அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து காரில் பயணத்தை தொடர்ந்த அமித்ஷா தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்தடைந்துள்ளார்.

மீம்ஸ்:

அமித் ஷா தமிழகம் வருவதையொட்டி எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் சமூக வலைதளங்களில் #Go_Back_Amitshah என்ற ட்விட்டர் ஹேஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது பதாகை வீச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top