ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி சூசகம்! - பகீர் தகவல் !!

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி சூசகம்! – பகீர் தகவல் !!

2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அளவில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தன. மேலும் வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பாராத விதமாக மிக வலுவானதாக மாறியது. கடந்த ஓரிரு வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தின் மேல் மேலும் ஓங்கியடித்திருக்கிறது. கொரோனா […]

Continue Reading

மேற்கு வங்கம்: “பால் வாங்க வந்தவரை லத்திசார்ஜ் செய்த போலிஸ்: அடியால் திடிர் மரணம்”;!

“..பாதிக்கப்பட்டவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது..” மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் ஹவுராவில் 32 வயதான ஒருவர் புதன்கிழமை ஊரடங்கின் போது பால் வாங்க வெளியே சென்றார், அப்போது அவர் போலீசாரால் தாக்கப்பட்டார். லத்தியால் தாக்கி வீசிய பின்னர் அவர் காலமானார். அவர் காயங்களால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நபர் ஹவுராவில் வசிக்கும் லால் சுவாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் பால் வாங்குவதற்காக தனது இல்லத்திலிருந்து வெளியேறினார். […]

Continue Reading

ரேஷன் அட்டைக்கு ரூ1000: ரேஷன் பொருட்கள் இலவசம் !! – முழு தகவல் !!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்றும், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மார்ச் 24 தமிழக சட்டமன்றத்தில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி ரேஷன் அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும். மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை […]

Continue Reading

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை (23/03/2020) காலை வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை (14 மணி நேரம்) சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று […]

Continue Reading
கொரோனா அச்சம்: கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

கொரோனா அச்சம்: கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் வேலை  இன்றி ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்…” மாநிலம் முழுவதும் கொரோனா அச்சத்தால்  கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால்  கஷ்டப்படும்  ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் வரை வேலை செய்ய  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலரும் தங்கள் வேலைகளை  வீட்டில் இருந்து செய்து வருகின்றனர்.  ஆனால் தினக் கூலி […]

Continue Reading

ஏப்ரல் 1: தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் !! –

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்தத் திட்டத்தை 2020 ஜூன் 30ஆம் தேதிக்குள் அமல்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் காலக்கெடுவும் விதித்தது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு […]

Continue Reading
உ.பி கலவரம்: பாஜக இளைஞர் பிரிவு நிர்வாகி அதிரடியாக கைது;சுடப்பட்ட இளைஞர் பலியானதால் அலிகரில் பதற்றம்!

உ.பி கலவரம்: பாஜக இளைஞர் பிரிவு நிர்வாகி அதிரடியாக கைது;சுடப்பட்ட இளைஞர் பலியானதால் அலிகரில் பதற்றம்!

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அலிகரின் உப்பர்கோட்டில் பெண்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டத்தை கலைக்க கடந்த மாதம் 23-ம் தேதி அலிகர் போலீஸார் முயன்றனர். அப்போது, குடியுரிமை சட்ட ஆதரவாளர்களும் அங்கு போராட்டத்தில் இறங்கியதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் முகமது தாரிக் முனவர் (25), முகமது இப்ராஹிம் (26) ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பட்டன. இதில் முகமது தாரிக் தீவிரசிகிச்சை பிரிவில் […]

Continue Reading
டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'புதிய சந்தை' அமைத்து பொருட்களை விற்று நிவாரண உதவி செய்த டெல்லி-ஷாஹீன்பாக் போராட்ட பெண்கள்! 

டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘புதிய சந்தை’ அமைத்து பொருட்களை விற்று நிவாரண உதவி செய்த டெல்லி-ஷாஹீன்பாக் போராட்ட பெண்கள்! 

…”எங்கள் பெண்கள் பல பொருட்களைத் தயாரித்துள்ளனர், மேலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான லாபம் நிவாரண நிதிகளுக்குச் செல்லும்” என்று ஷாதன் கூறினார்…” புதுடெல்லி – டெல்லி வன்முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் பல்வேறு முயற்சிகள் மூலம் வருகிறது. வடகிழக்கு டெல்லியின் ஏழை மக்களுடன் லாபத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக ஷாஹீன் பாக் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளம் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை ஷாஹீன் பாக் எதிர்ப்பு தளத்தில் ஒரு சந்தையை அமைத்தனர். நக்மா-இ-கைர் (கவனிப்புப் பாடல்) என்ற தன்னார்வ தொண்டு […]

Continue Reading

டெல்லியில் 61 எம்எல்ஏக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை!! NPRக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !!

என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. New Delhi: டெல்லி சட்டமன்றத்தில் என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போது, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் 70 பேரில் 61 பேரிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லையென்பது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் […]

Continue Reading
corona-virus-caused-the-death-of-the-second-in-india

இந்தியாவை ஆட்டி படைக்கும் கொரோனா: இந்தியாவில் இரண்டாவது உயிர்ப்பலி! – அச்சத்தில் மக்கள் !!

கொரோனா வைரசால் டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து , இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. 130 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசால் 1,45,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,416 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரசின் வீரியம் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் கூறப்படும் […]

Continue Reading