ICU-வில் அனுமதிக்கும் நிலையில் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம் எச்சரிக்கை !!

ICU-வில் இந்தியப் பொருளாதாரம்  அனுமதிக்கும் நிலையில் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார். தற்போது நாட்டின் பொருளாதாரம் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. அதுபோன்று வேலையின்மையும் அதிகரித்துள்ளது. இதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 2024ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இலக்கு என்றும் மத்திய பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய ப.சிதம்பரம், “நாட்டின் பொருளாதாரத்தின் […]

Continue Reading

இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி – ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம் ! – பகீர் தகவல் !!

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கி ஒன்று கடந்தவாரம் சைபராபாத் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில், ”பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் தங்கள் வங்கியில் 2,76,000 கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றார். ஆனால் தற்போது வரைக் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றும் அவரைத் தொடர்புக் கொள்ளமுடிவில்லை எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும்.” என மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட தெலங்கானா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Continue Reading

இழுத்து மூடும் நிலையில் வோடாபோன் : வோடாபோன் வைத்திருப்போர் உஷார் !! மத்திய அரசு உதவுமா ?

கடந்த 2019ம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே இருந்தது. ஒரு புறம் வலுத்து வரும் போட்டி, மறுபுறம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு, இதற்கிடையில் அவ்வப்போது எட்டி பார்த்த ஐயூசி கட்டணம், கட்டண அதிகரிப்பு என பல பிரச்சனைகள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசு உதவி கிடைத்தால், நிறுவனங்களை நடத்தலாம். இல்லையெனில் நிறுவனங்களை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறும் அளவுக்கு போயின. இந்த நிலையில் லண்டனை […]

Continue Reading

இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்! – அதிர்ச்சியில் மக்கள் !!

11 ஆண்டுகளில் ஏற்படாத வகையில் மும்பை பங்குச்சந்தையில் ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.3.6 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதியன்று 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட பட்ஜெட் உரையை ஆற்றினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்னைக்குரிய அம்சங்கள் இருப்பதாக பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கிய […]

Continue Reading

பட்ஜெட்: எவை விலை உயரும்? எவை விலை குறையும்? – பட்டியல் பாருங்க !!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுவரை இல்லாத அளவுக்கு மீக நீண்ட பட்ஜெட் உரையை பிப்ரவரி 1ஆம் தேதி அளித்திருக்கிறார். பட்ஜெட் பற்றி பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், நாட்டின் சராசரி மனிதர்களின் கேள்வி, ‘இந்த பட்ஜெட்டால் எவை விலை உயரும்? எவை விலை குறையும்?’ என்பதுதான். விலை உயர்வுக்கு உள்ளாகும் பொருட்கள் * வெண்ணெய், நெய், சமையல் எண்ணெய்கள், வேர்க்கடலை * மக்காச்சோளம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, விதைகள், பாதுகாக்கப்பட்ட உருளைக்கிழங்கு * சூயிங்கம், டயட் சோயா ஃபைபர், […]

Continue Reading

JIO விற்காக மோடி அரசு தீட்டிய திட்டமா? வீட்டுக்குக் கிளம்பிய 92,000 BSNL, MTNL ஊழியர்கள் – அதிர்ச்சி தகவல் !

பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் இன்றுடன் “விருப்ப ஓய்வு” பெறுகின்றனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், பா.ஜ.க ஆட்சியில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூபாய் 14,300 கோடி இழப்பு ஏற்ட்டுள்ளது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு பிறகு, 4ஜி சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதற்கிடையே, வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், நிதிச் சுமையை குறைக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் […]

Continue Reading

விண்டோஸ் 7 அவ்ளோதான் : இனி ஒரே வழி தான்! என்ன அது !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2009 ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்பட்ட விண்டோஸ் 7 அப்டேட் இனிமேல் கிடைக்காது என்று அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் கடந்த நவம்பர் மாதம் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், “விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்பட்ட கணினிகள் ஜனவரி 14ஆம் தேதிக்கு பிறகும் நன்றாக வேலை செய்யும். ஆனால் மென்பொருளில் அப்டேட் இல்லாததால் வைரஸ் தாக்குவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன” என்று கூறியது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி 13ஆம் தேதி 2015ஆம் ஆண்டிற்கு […]

Continue Reading

100க்கும் அதிகமான பெண் சிசுக் கொலை; தமிழகத்தை உலுக்கும் ஸ்கேன் சென்டர்- அதிர்ச்சி பின்னணி!

ஏராளமான பெண் சிசுக் கொலைகளை அரங்கேற்றி இருப்பதாக ஸ்கேன் சென்டர் மீது எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலினத் தேர்வு தடுப்புச் சட்டம் 1994-ன்படி கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்வது குற்றம். அதையும் மீறி முயற்சித்தால் கடும் தண்டனை வழங்கப்படும். பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அதனை கொன்றுவிடும் எண்ணம் இன்னும் அணையா தீயாய் சில இடங்களில் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள ஒரு […]

Continue Reading

2 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் டாப் 100 பட்டியலில் வந்தது எப்படி?- அதிர வைக்கும் முறைகேடு – புகார் பற்றி TNPSC விசாரணை!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 9,300 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் நடந்தது. இந்த தேர்வு முடிவை நவம்பர் மாதம் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது. தேர்வாணையம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் மொத்த தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றவர்களில் […]

Continue Reading

கிளுகிளுப்பு காட்டி CAA-வுக்கு மிஸ்டு கால் ஆதரவு திரட்ட பா.ஜ.க-வின் கீழ்த்தரமான செயல்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிப்போர் மிஸ்ட் கால் கொடுங்கள் என்று கூறிய பா.ஜ.க., அந்த போன் நம்பரை ஒரு பெண் தொலைப்பேசி நம்பர் என பொய்யாக பரப்பி வருகிறது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்ற நினைத்து அவ்வப்போது அம்பலப்படுவது வழக்கம். பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும், இந்துத்வா கருத்துகளுக்கும் எதிராக, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேசமயத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல் குடியுரிமை […]

Continue Reading