“கொரோனா சிகிச்சைகாக தற்காலிக மருத்துவமனை அமைக்க ரெசார்ட்களை வழங்கிய மகேந்திரா” : குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மகேந்திரா ரெசார்ட்களை, தற்காலிக மருத்துவ முகாம்களாக மாற்றிக் கொள்ள அதன் குழுமத்தலைவர் ஆனந்த மகேந்திரா அனுமதியளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தனது தீவிரத்தன்மையைக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்றும், மீறிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் […]

Continue Reading

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை (23/03/2020) காலை வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை (14 மணி நேரம்) சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று […]

Continue Reading
CAA: அமைச்சர்களை கேள்விகளால் துளைத்த பெண்

CAA: அமைச்சர்களை கேள்விகளால் துளைத்த பெண்! – வைரல் வீடியோ !!

விருதுநகரில் சிஏஏ தொடர்பாக அமைச்சர்களிடம் பெண் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டுறவுத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத் திறப்பு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு நிலையத்தை திறந்துவைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட […]

Continue Reading
இந்துக்களை தாக்கிய தீவிரவாதிகளை அரஸ்ட் பண்ணுங்க... போலீசுக்கு பாஜக தலைவர் அட்வைஸ்!!

இந்துக்களை தாக்கிய தீவிரவாதிகளை அரஸ்ட் பண்ணுங்க… போலீசுக்கு பாஜக தலைவர் அட்வைஸ்!!

“தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களை தாக்கிய தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.” இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]

Continue Reading
coronavirus bird flu

கரோனா, பறவைக்காய்ச்சல் பீதி: கோழிப்பண்ணை தொழில் முடக்கம்! தினமும் 21 கோடி ரூபாய் இழப்பு!!

தமிழகத்தில் நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கோழிப்பண்ணைத் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. இம்மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு மற்றும் முட்டைக்கோழி வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். தமிழகத்தின் முட்டை மற்றும் கோழி இறைச்சித் தேவையை இம்மாவட்டங்களே பெரும் பங்கு பூர்த்தி செய்கின்றன. இப்பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் பெரும்பகுதி, உள்மாநிலத் தேவைக்கும் […]

Continue Reading
பைக்கை எரித்து 'பலே நாடகம்'

பைக்கை எரித்து ‘பலே நாடகம்’ கட்சியில் பதவிக்காக செய்த இந்து முன்னணி பிரமுகரின் திருகுதாளம் !!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் அதவத்தூரை சேர்ந்தவர் சக்திவேல். மணிகண்டம் ஒன்றிய இந்து முன்னணி பொறுப்பாளரான  இவர், வீட்டில் குடும்பத்தினருடன் 10.03.2020 அன்று தூங்கிக்கொண்டிருந்தார். அவருடன் சித்தப்பா மகன் முகேஷ் தங்கியிருந்தார். வீட்டுவாசலில் அவரது பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு இவரது பைக் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் கல்வீசி ஜன்னல் கண்ணாடி உடைக்கப்படும் சத்தம் கேட்கவும் கண்விழித்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தபோது பைக் எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். […]

Continue Reading

சிஏஏ போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை.. ஹைகோர்டில் அரசு பதில்!

“சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது…” சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பில்லை எனவும், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை சார்பில் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் ஆதரித்தும் நடைபெறும் போராட்டங்களால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு […]

Continue Reading
பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய – BJP, VHP அமைப்பினர் கைது : வெளியானது சதித்திட்டம் !! அம்பலம் !!

கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் கணபதி வேதம்பாள் நகரில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசல் மீது கடந்த 4-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு […]

Continue Reading

பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்; பொதுமக்கள் அஞ்சலி!

தி.மு.க. பொதுச் செயலாளரும் மூத்த திராவிட இயக்கத் தலைவருமான க. அன்பழகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98. திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரும், தி.மு.கவின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் முதுமை காரணமாகவும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஃபிப்ரவரி 24ஆம் தேதி […]

Continue Reading
"இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

“இறைச்சி, கடல் உணவுகளில் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?” – FSSAI – விளக்கம்!

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என FSSAI தலைவர் ஜி.எஸ்.ஜி.அய்யங்கார் தெளிவுபடுத்தியுள்ளார். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் கடல் உணவுகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என FSSAI தலைவர் ஜி.எஸ்.ஜி.அய்யங்கார் தெளிவுபடுத்தியுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் அரசு திறம்படச் […]

Continue Reading