படித்துக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கிய பா.ஜ.க குண்டர்கள் ‘போலீஸ்’ : ஜாமியா மாணவர்கள் வெளியிட்ட CCTV காட்சி ! – அதிர்ச்சியில் போலீஸ் !

சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் குண்டர்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் இஸ்லாமிய மக்களுடன் இணைந்து பா.ஜ.க அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 14ம் தேதி அமைதியாக […]

Continue Reading
CAA போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள்

CAA போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள்! – தமிழக அரசு !!

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. டெல்லி, அசாம், உபி என வடமாநிலங்களில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது. அம்மாநிலங்களில் காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளது. குறிப்பாக வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் […]

Continue Reading

சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ் அராஜகம் !! தடியடி!! விடிய விடிய தமிழகம் முழுதும் வெடித்த போராட்டங்கள் !

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து இரவில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. சிஏஏ, என்.ஆர்.சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் இத்திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஷாகீன்பாக்கை போன்று வண்ணாரப்பேட்டையிலும் இரவு பகலாகப் போராட்டம் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டன. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. […]

Continue Reading
குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்

குஜராத்துக்கு வரும் ட்ரம்ப்… குடிசைகளை சுவர் கட்டி மறைக்கும் மோடி அரசு… –

டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதை முன்னிட்டு ஏழை மக்களை அவர் பார்த்திராத வகையில் மோடி அரசு சுற்றுச்சுவர் எழுப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரசு முறைப் பயணமாக வருகிற பிப்ரவரி 24, 25 ஆகிய இரு நாட்களுக்கு தனது மனைவியுடன் இந்தியா வருகிறார். அப்போது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க உள்ளார். அதன் காரணமாக அங்கு தற்போதிலிருந்தே கெடுபிடிகள் பலபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ட்ரம்ப் […]

Continue Reading

ஷாஹீன்பாக்கில் வெறுப்பை விதைக்க நினைத்த பா.ஜ.க – டெபாஸிட்டை காலி செய்து விரட்டிய வாக்காளர்கள்!

பா.ஜ.கவின் திட்டமிட்ட பிரச்சார யுக்திகளை மீறி ஓக்லா தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கான். டெல்லியில் ஷாஹீன்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒடுக்கத் தவறியதாக பா.ஜ.க கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால் அரசு துணைபோவதாகவும் குற்றம்சாட்டியது […]

Continue Reading

புர்கா அணிபவர்கள் தீவிரவாதிகள் !!! முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: பாஜக அமைச்சர் சர்ச்சைக் கருத்து

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில இணை அமைச்சர் ரகுராஜ்சிங் வலியுறுத்தி உள்ளார். இவர் ஏற்கெனவே இதுபோல் கருத்துகள் தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். உ.பி.யின் அலிகரில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது இணை அமைச்சர் ரகுராஜ்சிங் கூறியதாவது: ”இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்கா அணிய முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கு கடந்த வருடம் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல உயிர்கள் […]

Continue Reading

“பாஜக வெறுப்புணர்வை மட்டுமே வளர்க்கிறது;” குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரடியாக ராஜினாமா செய்த பாஜக கவுன்சிலர்!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இந் நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். அவர் பெயர் உஸ்மான் படேல். இவர் முன்னாள் […]

Continue Reading

இடஒதுக்கீடு என்பது பிறப்புரிமை: மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா

இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டுமென ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், மாநில அரசு பணிகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, அது மாநில அரசுகளின் விருப்புரிமை என உத்தரவிட்டது. எனினும், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]

Continue Reading

‘ஸ்வச் பாரத்’ காணாமல் 4.5 லட்சம் கழிப்பறைகள் – பா.ஜ.க அரசின் மிகப்பெரும் ஊழல்! – அதிர வைக்கும் தகவல் !!

மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிப்பறைகள் காணாமல் போயுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பினர் ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது. ஸ்வச் பாரத் திட்டத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டதாக பா.ஜ.க அரசு கூறிவரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது […]

Continue Reading

“டெல்லி மக்கள் சோம்பேறிகள்”: பா.ஜ.க.,வுக்கு ஓட்டுப் போடாத மக்களைத் திட்டிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் !

பால்கோட் வான்வழித் தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில் பற்றி டெல்லி மக்கள் கவலைப்படவில்லை என்று பா.ஜ.க சார்பு தொகுப்பாளர் சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது, 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடும் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி […]

Continue Reading