பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்; குருகுலக் கல்வி வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டில் குருகுலக் கல்விக்கு புத்துயிர் அளிக்க வேண்டும், கல்வித் திட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பகுதியாக கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கூறியுள்ளார். கோவா மாநிலம் பனாஜி அருகேயுள்ள தோனா பவுலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், நாட்டின் கல்வி முறையில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கு சிறந்த யோசனைகளை வழங்குபவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். சமஸ்கிருத மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தரப்பட வேண்டும். இதனை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். […]

Continue Reading

இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி – ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம் ! – பகீர் தகவல் !!

தெலங்கானா மாநிலத்தில் செயல்பட்டுவரும் தனியார் வங்கி ஒன்று கடந்தவாரம் சைபராபாத் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகாரில், ”பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் தங்கள் வங்கியில் 2,76,000 கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றார். ஆனால் தற்போது வரைக் கடன் தொகையை திருப்பி தரவில்லை என்றும் அவரைத் தொடர்புக் கொள்ளமுடிவில்லை எனவே அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும்.” என மனு அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட தெலங்கானா போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Continue Reading

ரூ.40,000 ஊதியத்தில் ஜிப்மரில் வேலைவாய்ப்பு !!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணியின் தன்மை : multitask worker, data entry operator பணியிடங்கள்: 2 வயது வரம்பு : அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஊதியம்: ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Dr. Rahul Dhodapkar, Additional Professor […]

Continue Reading

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் !!! தேர்வு எழுதுபவர்கள் பாருங்க !!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் பணம் கொடுத்து பலர் வேலைக்கு சேர்ந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் பல அரசு அதிகாரிகள் கைதாகி வருகின்றனர். இந்தநிலையில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. அதன்படி அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்து […]

Continue Reading

அங்கன்வாடியில் முட்டை வழங்க எதிர்ப்பு” ! “ஊட்டச்சத்து குறைபாடு பற்றி கவலையில்லை – பா.ஜ.க அராஜக போக்கு !! –

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய – மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் படி மாணவர்களுக்கு வாரத்தில் 4, 5 முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் மற்றும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம், […]

Continue Reading

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏஜென்ட்! சித்தாண்டி விசாரணையில் சிக்கும் TNPSC அதிகாரிகள்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் சிபிசிஐடி போலீசார் இரவு பகலாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான சித்தாண்டி முறைகேடாகத் தனது குடும்பத்துக்கே அரசு வேலை வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் சித்தாண்டியை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை […]

Continue Reading

5, 8 பொதுத் தேர்வு ரத்து! மாணவர்கள் மகிழ்ச்சி !! – அரசுக்கு நன்றி !

5,8ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் 2017 முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வைக் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித் துறை. இதற்காகக் கடந்த நவம்பர் 28ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது. 8ஆம் வகுப்புக்கு மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 17 வரையிலும், 5ஆம் வகுப்புக்கு […]

Continue Reading

5, 8 பொதுத் தேர்வு: தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை? பதில் சொல்லுமா அரசு !!

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு நிச்சயமாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். […]

Continue Reading

கல்விகூடங்கள் வழியாக களமிரங்கும் ‘RSS’: உ.பியில் பரபரப்பாக உருவாகும் பள்ளிக்கூடம். – அதிர்ச்சியில் இந்திய கல்வியாளர்கள்!

புதுடெல்லி: முதல் ஆர்.எஸ்.எஸ் பள்ளியை ராஜ்ஜு பயா சைனிக் வித்யா மந்திர் (ஆர்.பி.எஸ்.வி.எம்) தனது முதல் சேர்க்கையை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. பள்ளி கட்டிடம் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில், ஆறாம் வகுப்புக்கு 160 மாணவர்களின் முதல் தொகுதிக்கான விண்ணப்பங்களை பள்ளி அழைத்துள்ளது. ஆர்.பி.எஸ்.வி.எம் ஒரு முழுமையான பள்ளியாக இருக்கும். “நாங்கள் என்.டி.ஏ, கடற்படை அகாடமி மற்றும் இந்திய இராணுவத்தின் 10 + 2 தொழில்நுட்ப தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வோம்” என்று ஆர்.பி.எஸ்.வி.எம் இயக்குனர் கேணல் […]

Continue Reading

“10ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் RSS குறித்த தகவல்”; பாடவரிகளை நீக்க RSS வழக்கையெடுத்து அடிபணிந்த தமிழக அரசு! -வரலாற்றை மறைக்க RSS தீவிர முயற்சி!

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகள் தவறானவை என்றும் சங்கத்தின் பிம்பத்தை குறைக்கின்றன என்றும் கூறி ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றத்தில் மனு அளித்ததை அடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவ சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பான சில பகுதிகளை 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து நீக்குவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை தமிழக அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 10 ஆம் வகுப்பின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒரு பத்தி தொடர்பானது. […]

Continue Reading