“கள்ளக்காதலியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்”; பா.ஜக எம்எல்ஏ.வை பின்னியெடுத்த மனைவி, புரட்டியெடுத்த தாய் !

TRENDING NOW அரசியல்

மும்பை, பிப். 14: கள்ளக்காதலியுடன் பிறந்த நாளை கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ.வை அவரது மனைவியும் எம்.எல்.ஏ.வின் தாயாரும், பொது மக்களும் தர்ம அடி கொடுத்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஆர்னி தொகுதி எம்.எல்.ஏ.ராஜூநாராயண் தோட்சம். இவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் அர்ச்சனா. இவர் பழங்குடி இனத்தவர். ஆசிரியையாக இருக்கிறார் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. ஆனால் எம்.எல்.ஏ. ராஜூ நாராயண் மனைவியையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு பிரியாஷிண்டே என்றபெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது அவரது மனைவிக்கும், எம்.எல்.ஏ.வின் தாயாருக்கும் பொது மக் களுக்கு பிடிக்கவில்லை இந்த நிலையில் எம்.எல்.ஏ.ராஜ நாராயண் நேற்று முன்தினம் கள்ளக் காதலியுடன் தனது 42வது பிறந்த நாளை யவத்மாலில் கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டி ஒன்றையும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு எம் எல்.ஏ.வும் அவருடைய கள்ளக் காதலியும் திரும்பி சென்றபோது அவர்களுடைய காரின் அருகில் வைத்து மனைவி அர்ச்சனாவும் எம். எல்.ஏ.வின் தாயாரும், பிரியாவிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மேலும், அர்ச்சனாவின் ஆதரவாளர்கள் சிலரும் பிரியாவை தாக்கினர் அப்போது கள்ளக்காதலியை காப்பாற்ற எம்.எல்.ஏ. ராஜூ நாராயண் முயன்றபோது அவரும் தாக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இரன்டாவது மனைவி:

இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு ஆதராக பொதுமக்களும் எல்.ஏ.வை தாக்கினர்.

இது பற்றி தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி கும்பலை விரட்டி விட்டு எம்.எல்.ஏ.வையும் பிரியாவையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

வீடியோ பார்க்க: