ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை “காலை உடைத்து, சுட்டு தள்ளினால் ரூ.5100 பரிசு” : உ.பி பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

TRENDING NOW அரசியல்

உ.பி: ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களைச் சுட்டால் ரூ.5100 பரிசு அளிக்கிறேன் என்ற பாஜக எம்.எல்.ஏவின் பேச்சு உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களை அலற வைத்துள்ளது.

சீனாவில் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸுக்கு தற்போது இந்தியாவில் 681 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை மீறுபவர்களைச் சுட்டால் ரூ.5100 பரிசு அளிக்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் நந்த் கிஷோர் குர்ஜார்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் தொடர்பாக இவர் பேசிய விடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் கால்களை ஓடிக்குமாறு நான் போலீசாரை வேண்டுகிறேன்.

நீங்கள் கூறுவதை கேட்கவில்லை என்றால் அவர்களது கால்களில் சுடுங்கள்.

அவர்களை தேச விரோதிகள் போலதான் நடத்த வேண்டும். அரசின் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அவர்கள் பயங்கரவாதிகள்.

விதிகளை மீறுபவர்களின் கால்களை ஓடிப்பவர்கள் மற்றும் அவர்களைச் சுடும் கான்ஸ்டபிள்களுக்கு நான் ரூ.5100 பரிசாக வழங்குவேன். என்றார் அவர்.

♦ இதையும் படிங்க: