November 26, 2020

Adrasakka

#1 Tamil News Website

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்த கேள்வி ; அமிதாப் பச்சன் மீது வழக்கு தொடுத்த பாஜக தலைவர்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் தனியார் டிவி நிகழ்ச்சியின் 12ம் பகுதி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த  வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு ஒளிபரப்பில் நடிகர் அனூப் சோனியும், சமூக சேவகர் வில்சனும் கலந்து கொண்டனர். அப்போது 6 லட்சத்து 49 ஆயிரம்  ரூபாய் பரிசுத்தொகைக்கான கேள்வி கேட்கப்பட்டது.

அதில்,‘1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி டாக்டர் அம்பேத்கரும், அவரது  ஆதரவாளர்களும் எந்த நூலின் நகலை எரித்தனர்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

விடைகளாக, விஷ்ணு புராணம், பகவத்கீதை, ரிக்வேதம்,  மனுஸ்மிருதி ஆகிய நூல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த கேள்வி தொடர்பாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

கேட்கப்பட்ட கேள்வி குறிப்பிட்ட மதத்தினரை மையப்படுத்தி கேட்கப்பட்டதால், இது தவறானது என்றும், இது பொது அறிவு கேள்வி என்பதால், இதில் என்ன தப்பு உள்ளது என்று மற்றொரு தரப்பும் பதிவுகளை வெளியிட்டு வந்தன.

திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரி, ‘மைக்ரோ பிளாக்கிங்’தளமான டுவிட்டரில் அந்த நிகழ்ச்சியின் ஒரு கிளிப்பைப் பகிர்ந்துகொண்டு,‘இந்த டிவி நிகழ்ச்சியில் இடதுசாரிகளின் சிந்தனைகள் திணிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி குழந்தைகளே, கலாசாரப் போர்கள் எவ்வாறு வெற்றி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒருவகையான ‘குறியீடு’முறை என்று அழைக்கப்படுகிறது’என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, அனைத்திந்திய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் என்பவர் உத்தரபிரதேச மாநிலம், லக்னோ அடுத்த திரிவேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்,‘டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்கு உரியது. இது சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தும்.

சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், டிவி சேனல், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அமிதாப்பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top