“கொரோனா சிகிச்சைகாக தற்காலிக மருத்துவமனை அமைக்க ரெசார்ட்களை வழங்கிய மகேந்திரா” : குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மகேந்திரா ரெசார்ட்களை, தற்காலிக மருத்துவ முகாம்களாக மாற்றிக் கொள்ள அதன் குழுமத்தலைவர் ஆனந்த மகேந்திரா அனுமதியளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தனது தீவிரத்தன்மையைக் காட்டத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை மக்கள் தீவிரமாக கடைபிடிக்கவேண்டும் என்றும், மீறிவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல மாநில அரசுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் […]

Continue Reading

இதை செய்தால் மட்டுமே ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் – மூத்த சீன மருத்துவர் அதிரடி!

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சீனாவின் மூத்த அரசு மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். உலகின் 160க்கும் மேலான நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது கோவிட் 19 எனும் உயிர்க்கொல்லி நோய். இதனால் உலக அளவில் மூன்று லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேலானோர் பலியாகியிருக்கின்றார். இதில், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவையும் மிஞ்சிய இத்தாலி நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார். ஏனெனில், அந்த நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை என்றும், மக்கள் கொரோனாவின் பாதிப்பை உணராமல் இருப்பதும்தான் […]

Continue Reading

CORONA ALERT: ICMR பரிந்துரைத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸை கொல்லுமா? எச்சரிக்கை பதிவு! – பரப்புங்கள்

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் பரிந்துரைத்த மருந்தை உட்கொள்வதால் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துவிட முடியுமா என்பதை விளக்கும் பதிவு. கொரோனா வைரஸுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை உபயோகிக்கச் சொல்லி பரிந்துரை செய்தது. இதனால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர். மேலும், இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா தாக்கினாலும் குணமாகிவிடும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் மருந்தகங்களில் சுயமாக சென்று […]

Continue Reading

ரேஷன் அட்டைக்கு ரூ1000: ரேஷன் பொருட்கள் இலவசம் !! – முழு தகவல் !!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்றும், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மார்ச் 24 தமிழக சட்டமன்றத்தில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி ரேஷன் அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும். மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை […]

Continue Reading

கொரோனாவுக்கு இடையில் பூஜைகளுடன் தொடங்கிய ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் !!

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காகச் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க […]

Continue Reading

கேவலம் செய்யும் சங்கிகள் : மருத்துவம் இந்தியா முழுவதும் இலவசமாக வழங்க பட வேண்டும் – மக்களின் கோரிக்கை !! – பரப்புங்கள் !!

இந்தியாவில் கொரோனா தன் காலை பலமாக பதித்துவிட்டால் அதனை சமாளிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு நம்மிடம் இல்லை தான். கொரோனாவால் 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்களா அல்லது 30 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்களா என்பதை எல்லாம் பிறகு விவாதிப்போம். ஆனால் நேற்று மாலை வட இந்தியாவின் நகரங்கள் அனைத்திலும் நடந்த பெரும் கொண்டாட்டங்கள், கர்பா நடனங்கள், வாத்திய இசை முழங்கும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன அணிவகுப்புகள், பட்டாசு வெடிப்புகள், இன்னும் இந்தியர்களுக்கு இந்த நோய் குறித்து ஒரு சுக்கும் […]

Continue Reading

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிப்பு!- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை (23/03/2020) காலை வரை நீட்டிப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை (14 மணி நேரம்) சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு நாளை காலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று […]

Continue Reading

டெல்லி ஷாகின்பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு !! – வெறிச்செயல் செய்யும் குண்டர்கள் !!- வீடியோ !

டெல்லி ஷாகின்பாக் போராட்டப் பகுதி அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ஷாகின்பாக் பகுதியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக இரவு-பகல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். எனினும் சிஏஏவுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் என்று ஷாகின்பாக் போராட்டக்காரர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். […]

Continue Reading
கொரோனா அச்சம்: கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

கொரோனா அச்சம்: கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!

“கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் வேலை  இன்றி ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்…” மாநிலம் முழுவதும் கொரோனா அச்சத்தால்  கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால்  கஷ்டப்படும்  ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் வரை வேலை செய்ய  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலரும் தங்கள் வேலைகளை  வீட்டில் இருந்து செய்து வருகின்றனர்.  ஆனால் தினக் கூலி […]

Continue Reading
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 22 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 22 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]

Continue Reading