டெல்லியில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் – கோட்டைவிட்ட அரசு! “இதற்கு ஏன் ஊரடங்கு? #CORONALOCKDOWN

கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழுமச் செய்திருக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 984 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக […]

Continue Reading
“மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்” : குவியும் பாராட்டுக்கள்!

“மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்” : குவியும் பாராட்டுக்கள்!

மதுரை மாவட்டம் தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – ஸ்ரீமதி தம்பதி. கடந்தாண்டு திருமணமான நிலையில் ஸ்ரீமதி கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் மனைவியை மதுரையில் தங்கவைத்துவிட்டு சமீபத்தில் வேலைக்காக மணிகண்டன் சென்னை வந்துள்ளார். இதனிடையே, ஸ்ரீமதிக்கு பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் அலுவலகத்தில் மணிகண்டன் விடுமுறை கேட்டுவிட்டு மதுரைக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இந்நிலையில், நாளை விடுமுறை எடுத்து மதுரைக்கு புறப்படலாம் என மணிகண்டன் நினைத்த நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மணிகண்டன் […]

Continue Reading
ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி சூசகம்! - பகீர் தகவல் !!

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி சூசகம்! – பகீர் தகவல் !!

2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அளவில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தன. மேலும் வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பாராத விதமாக மிக வலுவானதாக மாறியது. கடந்த ஓரிரு வருடங்களாகவே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்தின் மேல் மேலும் ஓங்கியடித்திருக்கிறது. கொரோனா […]

Continue Reading
வாளை காட்டிய மிரட்டிய பெண் சாமியார்

வாளை காட்டிய மிரட்டிய பெண் சாமியார் ! மிரண்ட போலீசார் ! விதியை மீறி கூட்டம் கூட்டிய ஆசிரமத்துக்கு சீல் !! கைது செய்த உ.பி. போலிஸ்!

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக் கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 563 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த தொற்றுநோய் சமூக பரவலாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மத்திய […]

Continue Reading

“கொரோனா சிகிச்சை அளிப்பதால் வீட்டைக் காலி செய்ய சொல்கிறார்கள்”: மருத்துவ ஊழியர்களுக்கு நேர்ந்த அவலம்!

கொரோனா அச்சம் காரணமாக தாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தங்களை வீட்டில் இருந்து வெளியேறுமாரு கட்டாயப்படுத்துக்கிறார்கள் என மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அரசுடன் இனைந்து மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் இரவு பகலாக கடினாம உழைத்து வருகின்றனர். இந்நிலையில், அதிகப்படியான நேரங்கள் உழைக்கும் அவர்களுக்கு பணியில் மத்தியில் மற்றொரு பெரிய […]

Continue Reading

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை “காலை உடைத்து, சுட்டு தள்ளினால் ரூ.5100 பரிசு” : உ.பி பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

உ.பி: ஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களைச் சுட்டால் ரூ.5100 பரிசு அளிக்கிறேன் என்ற பாஜக எம்.எல்.ஏவின் பேச்சு உத்தரப்பிரதேசத்தில் உள்ளவர்களை அலற வைத்துள்ளது. சீனாவில் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸுக்கு தற்போது இந்தியாவில் 681 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

மேற்கு வங்கம்: “பால் வாங்க வந்தவரை லத்திசார்ஜ் செய்த போலிஸ்: அடியால் திடிர் மரணம்”;!

“..பாதிக்கப்பட்டவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது..” மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் ஹவுராவில் 32 வயதான ஒருவர் புதன்கிழமை ஊரடங்கின் போது பால் வாங்க வெளியே சென்றார், அப்போது அவர் போலீசாரால் தாக்கப்பட்டார். லத்தியால் தாக்கி வீசிய பின்னர் அவர் காலமானார். அவர் காயங்களால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த நபர் ஹவுராவில் வசிக்கும் லால் சுவாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் பால் வாங்குவதற்காக தனது இல்லத்திலிருந்து வெளியேறினார். […]

Continue Reading
உ.பியில் ராமருக்கு சிலை வைத்த முதல்வர் யோகி

“நாடு முழுவதும் ஊரடங்கு… உ.பியில் ராமருக்கு சிலை வைத்த முதல்வர் யோகி” : மோடி பேச்சை கேட்காத பா.ஜ.க!?

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம் ஜென்ம பூமியில் ராம்லல்லா சிலை அமைக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி கட்டாயமாக நாட்டும க்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவைக் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார். 21 நாட்கள் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை யாரும் மீறக்கூடாது என்றும், […]

Continue Reading

21 நாட்கள்: ப.சிதம்பரத்தின் 10 ஐடியாக்கள்! செயல்படுத்துமா அரசு ?

அடுத்த 21 நாட்களுக்கு மத்திய அரசு அமல்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ப.சிதம்பரம் பட்டியலிட்டுள்ளார். நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், இதனால் அன்றாடப் பணியாளர்களும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்குப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க […]

Continue Reading

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் உயிரிழப்பு!

“..தமிழகம் முழுவதும் வீடுகளில் 15 ஆயிரத்து 298 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்…” பெய்ஜிங் (25 மார்ச் 2020): உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த […]

Continue Reading