November 26, 2020

Adrasakka

#1 Tamil News Website

“மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி!”

"மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதி!"

இந்தியாவில் பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை.

இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாஅட்களுக்கு முன்புதான் கோவிட்19 பாதிப்புக்குள்ளாகி, குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று காலை 2 மணி அளவில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அமித் ஷா சிகிச்சை பெற்று வருகிறார்.

PRESS RELEASE

இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தியில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 3-4 நாட்களாக, வாயுத்தொல்லை மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவிட்19க்குப் பிந்தைய பராமரிப்புக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நலம் சீராக உள்ளது. அவர் இங்கிருந்தபடி தன் பணிகளைத் தொடர்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ ALSO:

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top