ஷாஹீன்பாக்கில் வெறுப்பை விதைக்க நினைத்த பா.ஜ.க – டெபாஸிட்டை காலி செய்து விரட்டிய வாக்காளர்கள்!

பா.ஜ.கவின் திட்டமிட்ட பிரச்சார யுக்திகளை மீறி ஓக்லா தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார் ஆம் ஆத்மி வேட்பாளர் அமானதுல்லா கான். டெல்லியில் ஷாஹீன்பாக், ஜாமியா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஒடுக்கத் தவறியதாக பா.ஜ.க கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது. ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு கெஜ்ரிவால் அரசு துணைபோவதாகவும் குற்றம்சாட்டியது […]

Continue Reading

“நாட்டுக்கே நல்ல சேதி சொல்லியுள்ளது டெல்லி” – பா.ஜ.கவை வீழ்த்திய அர்விந்த் கெஜ்ரிவால்

“டெல்லி மக்கள் உண்மையான வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர். இது டெல்லியின் வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றியும் கூட” எனத் தெரிவித்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தொடக்கம் முதலே முன்னணியில் இருந்து வரும் ஆம் ஆத்மி, மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களைப் பிடித்துள்ளது. பா.ஜ.க 7 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. வெற்றிக்குப் பின்னர் இதுகுறித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், “மூன்றாவது […]

Continue Reading

புர்கா அணிபவர்கள் தீவிரவாதிகள் !!! முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: பாஜக அமைச்சர் சர்ச்சைக் கருத்து

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில இணை அமைச்சர் ரகுராஜ்சிங் வலியுறுத்தி உள்ளார். இவர் ஏற்கெனவே இதுபோல் கருத்துகள் தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். உ.பி.யின் அலிகரில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது இணை அமைச்சர் ரகுராஜ்சிங் கூறியதாவது: ”இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புர்கா அணிய முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கு கடந்த வருடம் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல உயிர்கள் […]

Continue Reading

“பாஜக தொண்டரை கொலை செய்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்;” விசாரிக்கப்பட்ட வழக்கு ‘9’ ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

கடந்த 2012-ஆம் ஆண்டு, கொல்லம் அருகே கடவூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஜெயன் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஒன்பது பேர் மீது, அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சிறையிலிருந்து பிணையில் விடுதலையான ஒன்பது பேரும், தலைமறைவாகினர். இதை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீசார் அவர்களது படங்களுடன் நோட்டீஸ் வெளியிட்டு, 9 பேரையும் தேடி […]

Continue Reading

“பாஜக வெறுப்புணர்வை மட்டுமே வளர்க்கிறது;” குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரடியாக ராஜினாமா செய்த பாஜக கவுன்சிலர்!

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இந் நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். அவர் பெயர் உஸ்மான் படேல். இவர் முன்னாள் […]

Continue Reading

பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்; குருகுலக் கல்வி வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர்

நாட்டில் குருகுலக் கல்விக்கு புத்துயிர் அளிக்க வேண்டும், கல்வித் திட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பகுதியாக கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கூறியுள்ளார். கோவா மாநிலம் பனாஜி அருகேயுள்ள தோனா பவுலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், நாட்டின் கல்வி முறையில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கு சிறந்த யோசனைகளை வழங்குபவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். சமஸ்கிருத மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தரப்பட வேண்டும். இதனை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். […]

Continue Reading