5, 8 பொதுத் தேர்வு: தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை? பதில் சொல்லுமா அரசு !!

5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 2020 கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு நிச்சயமாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். […]

Continue Reading

நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரை 12 கி.மீ தூரம் தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற மக்கள் : ஆந்திராவில் நேரும் அவலம்! – வீடியோ

ஆந்திரா வனப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரமுடியாமல் நோயாளியை 12 கிலோமீட்டர் தூரத்திற்கு தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தின் தாரபர்த்தி பஞ்சாயத்தில் துங்கடா பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கேட்டு அவர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான ஜரதா நாகராஜ் என்பவர் சில நாட்களாக […]

Continue Reading

‘CAA’வை எதிர்த்து மதுரையில் வெடித்த ‘சாஹீன் பாக்’ புரட்சிப் போராட்டம்; இரவிலும் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்; காவல்துறையால் கலைப்பு! – தமிழகம் முழுதும் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு!

மதுரை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதன் வரிசையில் மதுரையில் மாணவர்களின் சார்பாக தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தவும், இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், தொடர் வீரவணக்க அஞ்சலி, குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு ஆகியன பல கோரிக்கைகளை வைத்து தன்னெழுச்சியாக மாணவர்களின் ஒருங்கிணைப்பு மூலம் போராட்டம் மதுரை அரசரடி UC மைதானத்தில் காவல்துறையின் முறையான அனுமதி பெற்று நடந்து வந்தது. இரவிலும் தொடர்ந்த போராட்டம்.. […]

Continue Reading

அடிக்கடி ஒற்றை தலைவலி வருகிறதா? ஏன் தெரியுமா ? இது தான் அதுக்கு காரணம். !!

ஒற்றைத் தலைவலி என்பது நமக்கு ஏற்படும் சாதாரண தலைவலி போன்று கிடையாது.நிறைய பேருக்கு அவர்கள் தீராத மன அழுத்தத்தில் இருந்தாலோ, பயம், அதிர்ச்சி, டென்ஷன் கூட ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது. அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட விட்டமின் பற்றாக்குறை தான் காரணம் என்கிறது ஆய்வு. அதைப் பற்றிய விரிவான தொகுப்பு. நிறைய பேருக்கு எப்போது பார்த்தாலும் தலைவலி வந்து கொண்டே இருக்கும். இந்த மாதிரி தலைவலி அடிக்கடி வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதிலும் சாதாரண தலைவலிக்கும் […]

Continue Reading

நான் கந்து வட்டிக்கு விட்டு தான் சம்பாதித்தேன்: ரஜினி அதிரடி வாக்குமூலம்!

நடிகர் ரஜினிகாந்த் மீதான வருமான வரி வழக்குகளை கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வருமான வரித்துறை வாபஸ் பெற்றதன் பின்னணியில் ரஜினி தெரிவித்திருக்கும் முக்கிய காரணம், ‘நான் வட்டிக்கு கடன் கொடுத்தேன்’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று ட்விட்டரில், ‘கந்து வட்டி ரஜினி’ என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது. வருமானம் தொடர்பான முழு விவரங்களை வழங்கவில்லை என்றும் தவறான தகவல்களை அளித்தார் என்பதற்காகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு 66.21 லட்சம் ரூபாயை வருமான வரித் துறை அபராதமாக […]

Continue Reading

டெல்லி ஜாமியாவில் துப்பாக்கி தூக்கிய காவி பயங்கரவாதி யார்?; முன்கூட்டியே திட்டமிட்ட தீவிரவாதி, பின்புலத்தில் பாஜக எம்எல்ஏ வா? – அம்பலமானது அடுக்கடுக்கான ஆதாரம்!

வியாழக்கிழமை பிற்பகல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் அவர் பல்கலைக்கழகத்தை நோக்கி முன்னேறும் ஒரு நேரடி ஒளிபரப்பு வீடியோவைக் கொண்டிருந்தது. அந்த வீடியோவில், “இந்து ஊடகங்கள்” எதுவும் இல்லை என்று அவர் கூறுவதைக் கேட்கலாம். சம்பவத்தின் வீடியோ காட்சிகளுடன் பொருந்தக்கூடிய அவரது புகைப்படங்களைக் கொண்டிருந்த பக்கம் பின்னர் நீக்கப்பட்டது. இது பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இந்துத்துவா ஆர்வலர்களின் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு […]

Continue Reading

இந்தியாவின் முதல் கொரானா வைரஸ் பாதிப்பு; கேரளா மாணவருக்கு தீவிர சிகிச்சை!

திருவனநதபுரம் (30 ஜன 2020): கேரள மாநிலத்தில் சீனாவிலிருந்து வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில். சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹானிலிருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]

Continue Reading

தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவும் அபாயம்; மருத்துவ கழிவுகளுடன் சீன கப்பல் சென்னை வருகை!

சென்னை: மருத்துவ கழிவுகளுடன் சீன கப்பல் ஒன்று சென்னை துறைமுகம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அந்த கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து சென்னை துறைமுக உயர்மட்ட அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்ததாகவும் தெரிகிறது. எனினும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஒட்டுமொத்த சீனாவில் கலக்கத்தில் ஆழ்த்திய கொராணா வைரஸின் தாக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் இதுவரை பலியாகியுள்ளனர். சீனாவில் பரவியுள்ள […]

Continue Reading

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

லண்டன் (30 ஜன 2020): மத்திய பாஜக அரசு கொன்டுவந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் போராட்ட அலைகள் வீசிவரும் நிலையில் இச்சட்டத்திற்கு எதிராக இந்தியாவை தான்டி பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புகள் உருவாகி வருகிறது. அத்தகைய வரிசையில்,குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இருந்த நிலையில் , ஐரோப்பிய யூனியன் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஏஏ.,வுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் பார்லி.,யில் 5 அமைப்புகள் சார்பில் 6 […]

Continue Reading

நெஞ்சு வலி காரணமாக நெல்லை கண்ணன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி (30 ஜன 2020): நெல்லை கண்ணன் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடநத பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தினமும் காலையும், மாலையும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நெஞ்சுவலி, மூச்சித்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading