November 26, 2020

Adrasakka

#1 Tamil News Website

”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல் ! – அதிர்ச்சியில் உலக நாடுகள் !!

”வூஹான் ஆய்வகத்தில்தான் கொரோனா உருவாக்கப்பட்டது”- சீன வைராலஜிஸ்ட் பரபரப்பு தகவல்!

சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.

வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், இதுதொடர்பான உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் அமெரிக்கா தொடக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால் இதற்கு சீனாவும், உலக சுகாதார அமைப்பும் மறுப்பு தெரிவித்தன. இந்நிலையில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும், இதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் சீன வைராலஜிஸ்ட் லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பான உண்மைகளை சீனா உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் முன்னரே, அரசுக்கு அனைத்து தகவல்களும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஹாங்காங் பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு சென்றார்.

கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எனது ஆய்வு முடிவை நான் பணிபுரியும் இடத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்தேன்.

சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்தேன்.

ஆனால் சீன அரசுக்கு பயந்து கொண்டு யாரும் அதனை வெளியிட மறுக்கின்றனர். உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைக்கவே பார்க்கின்றனர்.

இது உலக மக்களின் நலத்தை பற்றிய முக்கிய தகவல்.

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது கிடையாது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அவற்றை விரைவில் வெளியிட இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top