September 23, 2020

Adrasakka

#1 Tamil News Website

வக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு ? – கடும் போட்டி !!

வக்பு வாரியத் தலைவர் பதவி யாருக்கு

வக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற அ.தி.மு.க., தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது.

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இந்தப் பதவியைப் பெற தி.மு.க., அ.தி.மு.க-வினரிடையே கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. வக்பு வாரியத்தில் எம்.பி-க்கள் இரண்டு பேர், எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர்,

இரண்டு வழக்கறிஞர்கள், சன்னி, ஷியா பிரிவைச் சேர்ந்த இரண்டு பேர், முத்தவல்லிகள் இரண்டு பேர், சமூக ஆர்வலர், ஐ.ஏ.எஸ் அதிகாரி தலா ஒருவர் என 12 பேர் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

முத்தவல்லிகளுக்கான தேர்தல், வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

தி.மு.க தரப்பில் நவாஸ்கனி எம்.பி., செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., அபுபக்கர் எம்.எல்.ஏ ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அ.தி.மு.க தரப்பில் முகமதுஜான் எம்.பி இருக்கிறார்.

இது தவிர அரசு வழக்கறிஞர்கள் இரண்டு பேர், சமூக ஆர்வலர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள சூழலில் தி.மு.க., அ.தி.மு.க செல்வாக்கு சம பலத்தில் உள்ளது.

அதனால் முத்தவல்லிகள் தேர்தலில் வெற்றி பெறும் இரண்டு பேர், யாரைத் தலைவராக தேர்வு செய்வார்களோ அவர்கள்தான் வக்பு வாரியத் தலைவராக முடியும் சூழல் நிலவிவருகிறது.

இது குறித்து நவாஸ்கனி எம்.பி-யிடம் கேட்டதற்கு, “வக்பு வாரியத் தலைவராக அன்வர் ராஜா எம்.பி இருந்தார்.

அவரின் எம்.பி பதவிக் காலம் முடிவடைந்ததும், வக்பு வாரியத்தை தமிழக அரசு கலைத்துவிட்டது. அ.தி.மு.க-வில் முகமதுஜான் எம்.பியும், நானும் (நவாஸ்கனி எம்.பி) எம்.எல்.ஏ-க்கள் மற்றும் உறுப்பினர்களை நியமித்து வக்பு வாரியத்தைக் கலைக்காமல் அதைச் செயல்பட அரசு அனுமதித்திருக்கலாம்.

`கலைக்கப்பட்ட வக்பு வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்’ என அரசுக்கு நான் வலியுறுத்தினேன். அதனால், வக்பு வாரியத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வரும் 18-ம் தேதி முத்தவல்லிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அதன் பிறகு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளார். புதிய தலைவர், ஆக்கிரமிப்பிலுள்ள வக்பு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசியல் தலையீடு இல்லாமல் வருங்காலங்களில் வக்பு வாரியம் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்தச் சூழலில் வக்பு வாரியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க தரப்பில் கடும் போட்டி நிலவுகிறது. முத்தவல்லிகள் தேர்தலில் ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான 918 பேரிடம் தென் சென்னையைச் சேர்ந்த, ADMK  சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் தலைமையிலான அ.தி.மு.கவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தபால் மூலம் முத்தவல்லிகள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதனால், அவர்களிடம் போன் மூலம் அதிமுகவினர் பேசிவருகின்றனர்.

அதைப்போல தி.மு.க தரப்பிலும் முத்தவல்லிகள் தேர்தலில் ஓட்டுபோடுபவர்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top