August 8, 2020

Adrasakka

#1 Tamil News Website

#CORONACRISIS முழு ஊரடங்கு: மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனுக்கு தயாராகிறதாதமிழகம்? ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

cm-discuess-about-district-collectors

முழு ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இருந்துவந்த நிலையில் தற்போது வட மற்றும் உள் மாவட்டங்களிலும் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூன் 24) மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம், அளிக்கப்படும் சிகிச்சைகளின் விவரங்கள் மற்றும் ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்ததும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 64 ஆயிரத்து 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 35 ஆயிரத்து 339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், நேற்றைய நிலவரப்படி 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினந்தோறும் 2500க்கும் மேலானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தொடக்கத்தில் சென்னையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல் தற்போது மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்ததால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இதனால் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மாநிலம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

மதுரையிலும் அமலானது முழு ஊரடங்கு: மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனுக்கு தயாராகிறதா தமிழகம்? #CoronaCrisis

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜூன் 24 முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஊரடங்கு விதி முறைகளை மாவட்ட மக்களுக்கு ஆடியோ மூலம் அறிவுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வினய்.

அதில், “மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

24.06.20முதல் 30ம்தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் காய்கறி, மளிகைக்கடை, பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

நடமாடும் காய்கறி, பழக்கடைகளும் அதே நேரத்தில் இயங்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கே செல்ல வேண்டும். ஊரடங்கு நேரத்தில் பரவை, மாட்டுத்தாவணி சந்தைகள் இயங்காது. மீன், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top