July 13, 2020

Adrasakka

#1 Tamil News Website

‘நீங்க எம்பி-யா இல்ல…’ தரம்கெட்ட அரசியல் செய்யும் பா.ஜ.க – வார்த்தையில் வன்மம் கக்கிய கரு. நாகராஜன் : இனியும் பொறுமை எதற்கு ?

‘நீங்க எம்பி-யா இல்ல…’

தனியார் தொலைக்காட்சியில் கரூர் எம்.பி ஜோதிமணி குறித்து தரம்கெட்ட வகையில் பேசிய பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கரு. நாகராஜனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடுமுழுவதும் 4வது கட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் நிவாரணத்தை பிரம்மாண்ட அறிப்புகளாக மட்டும் மத்திய அரசு வெளியிட்டது.

ஆனால் எந்த வித நிவாரணங்களையும் ஏழை மக்களுக்கு வழங்கவில்லை.

முறையாக அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாத நிலையில் தான் நாடுமுழுவதும் கொரோனா பாதுகாப்பு முகாம்கள் உள்ளது.

இந்த அரசின் கையாளாகாதனத்தை இந்திய ஊடங்கள் மட்டுமின்றி, உலக நாட்டுகளில் உள்ள முக்கிய ஊடங்களும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அரசின் நடவடிக்கை குறித்தும் விவாதங்கள் நடத்தப்படுப்படுகிறது.

அந்த விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் பா.ஜ.கவினர், பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா கருத்தை ஏற்ற வலது சாரி ஆதரவாளர்கள் என கலந்துக்கொள்கின்றனர்.

அரசின் தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.கவினர் குற்றம் சாட்டும் எதிர்தரப்பினர் மீது வன்ம கருத்துக்களையும், ஆபாசக் கருத்துக்களையும் வீசி வருகின்றனர்.

சமீபத்தில் கூட பா.ஜ.கவின் ஆதரவாளாரும், வலதுசாரி சிந்தனையாளருமான கோலாகல ஸ்ரீநிவாசன், தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில், கொரோனா வைரஸை எதிர்த்து போராடச் சொன்ன மத்திய அரசு தற்போது அதனோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என சொல்வது ஏன் என நெறியாளர் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த கோலாகல ஸ்ரீநிவாசன், கொரோனாவுடன் வாழ வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார்கள்.

யாரையும் சாகச் சொல்லவில்லையே என்று பதிலளித்திருக்கிறார்.

இப்படி அலட்சியமாக பேசும் வகையில் பேசும் பா.ஜ.கவினர் வழக்கம் போல ஒருபடி மேலச் சென்று விவாதங்களில் கலந்துக்கொள்ளும் பெண் கருத்துரையாளர்கள் மீது ஆபாச வன்ம கருத்துக்களை வீசியுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய தினம் தனியார் தொலைக்காட்சியில் மோடி அரசு செய்தது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

அதில் காங்கிரஸ் எம்.பி சார்பில் ஜோதிமணி மற்றும் தி.மு.க எம்.பி கலாதிநிதி வீராசாமி கலந்துக்கொண்டார். மத்திய அரசு சார்பில் தமிழக பா.ஜ.க தலைவருகளில் ஒருவரான கரு.நாகராஜன் கலந்துக்கொண்டார்.

தரம்கெட்ட அரசியல் செய்யும் பா.ஜ.க - வார்த்தையில் வன்மம் கக்கிய கரு. நாகராஜன் : இனியும் பொறுமை எதற்கு ?

அப்போது நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் இணை ஆசிரியர் நெல்சன் சேவியரையும் கூட ஒரு கட்சியின் சார்பில் பேசியிருக்கலாம், மத்திய அரசைக் கேள்வி கேட்பதா? என சீறினார்.

அதுமட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசிய எம்.பி ஜோதிமணி மீது வன்கருத்துக்களை பேசியுள்ளார்.

மேலும் ஒருகட்டத்தில் ஒருமையில் பேசினார். எம்.பி ஜோதிமணி பற்றி பேசிய கரு.நாகராஜன் எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

முகநூல் பக்கத்தில் கருத்து :

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எம்.பி ஜோதிமணி கூறுகையில்,“நண்பர்களுக்கு வணக்கம்.

இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பா.ஜ.க-வின் கரு.நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன்.

புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன்.

தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

தரம்கெட்ட அரசியல் செய்யும் பா.ஜ.க - வார்த்தையில் வன்மம் கக்கிய கரு. நாகராஜன் : இனியும் பொறுமை எதற்கு ?

மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன்.

என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார்.

நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன்.

தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள்.

#IStandwithJothimani

இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani

நண்பர்களுக்கு வணக்கம்.இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன்…

Geplaatst door Jothimani Sennimalai op Maandag 18 mei 2020

லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன.

பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது.

என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் ” கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.

பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்ச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் .

பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம்

(இது குறித்து பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே- I am A Troll) எழுதியுள்ளார். )

ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும்.

தரம்கெட்ட அரசியல் செய்யும் பா.ஜ.க - வார்த்தையில் வன்மம் கக்கிய கரு. நாகராஜன் : இனியும் பொறுமை எதற்கு ?

அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.

எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான் வெற்றியை அளித்தார்கள்.

இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.

இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.

இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.

நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் என்னோடு நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், அன்புச் சகோதர, சகோதரிகளுக்கும் மன்மார்ந்த நன்றி.

தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top