September 23, 2020

Adrasakka

#1 Tamil News Website

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே: பாஜக பொறுப்பாளர் பேட்டி !!

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே: பாஜக பொறுப்பாளர் பேட்டி !!

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் இந்துக்களின் கடவுளான முருகனுக்கு எதிரானவர்களே என பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ் கூறியுள்ளார்.

இந்தமுறை அதிகத் தீவிரம் காட்டக் காரணம் என்ன?

தமிழகத்தில் முன்னாள் நக்சலைட்கள், பழைய நாத்திகவாதிகள், தமிழின் பெயரில் தீவிரம் காட்டுபவர்கள், ஆங்கில மொழியின் அடிமைகள் மற்றும் தமிழ் விரோதிகள் பாஜகவை எதிர்த்து வருகின்றனர்.

இவர்களுடன் எங்கள் கொள்கை ரீதியான மோதல் நடைபெற்று வருகிறது. இது தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும். தமிழகத்தில் கடவுள் முருகனை எதிர்த்து இந்து விரோதியாக இருப்பவர்கள் உண்மையில் தமிழ் இன விரோதிகள்.

முருகனை அகற்றி விட்டால் தமிழகம் இருக்காது. ஐந்தில் ஒரு பங்கு தமிழர்களின் பெயர்களில் முருகன் நேரடியாக இடம் பெற்றுள்ளார்.

அவரது பெயரை வைக்காதவர்களும் அன்றாடம் முருகனை தரிசிப்பவர்களே. எனவே, பாஜகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே.

தமிழகத்தில் திடீரென முருகனை தூக்கிப்பிடிக்கும் நீங்கள் வட மாநிலங்களில் ராமர் அளவுக்கு கார்த்திகேயனை வணங்குவதில்லையே?

ராமர் ஒன்றும் கார்த்திகேயனுக்கு எதிரானவர் அல்ல. சிவன், பார்வதி உள்ள இடத்தில் கார்த்திகேயன் இல்லாமல் போவதில்லை.

இந்தியர்களுக்கு சொந்தமான சிவனின் பிள்ளைகளான கணேசனை வட இந்தியக் கடவுளாகவும், கார்த்திகேயனை தென் இந்தியக் கடவுளாகவும் தமிழகத்தில்தான் பிரித்து பார்க்கப்படுகிறது.

பலம் இருந்தால் இது உண்மை என திமுக, தமிழர்கள் முன்பாக நிரூபிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடருமா?

இப்போதைக்கு மக்களவைத் தேர்தலில் அமைந்த கூட்டணி உள்ளது. இது சட்டப்பேரவைக்கும் தொடருமா? என்பது அதன் தேர்தல் அறிவிப்பிற்குப் பின்தான் தெரியும்.

இதைப் பற்றி இப்போதே பேசினால் மக்களவைத் தேர்தலின் கூட்டணிக்கு எதிரானது என அர்த்தமாகிவிடும்.

எனவே, சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி பற்றி பேசுவோம். இக்கூட்டணிக்கு தலைமை வகிப்பது யார் என்பதும் அப்போது முடிவு செய்யப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எக்காரணத்தைக் கொண்டும் திமுக வெற்றி அடையாத வகையில் நெருக்கடிகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறதே?

இதற்காக நாம் நெருக்கடி தர வேண்டிய அவசியமில்லை. வெற்றிவேலுக்கு எதிராக இருப்பவர்களை அவனே பார்த்துக் கொள்வான். 1950-ம் ஆண்டுக்கு முன்பாக திருவள்ளுவர் அணிந்திருந்த உடைகளை அவரது படங்களிலும், திருவள்ளுவரின் கோயில்களிலும் பாருங்கள்.

அதில் திருவள்ளுவர் அணிந்திருந்த காவி உடைகளை அகற்றியவர்கள் திமுகவினர். இதுபோல வரலாற்றின் உண்மைகளை மாற்றிவிட்டு பாஜகவின் மீது புகார் வைப்பது திமுகவினரின் வழக்கமாகி விட்டது.

இப்பிரச்சினையில் தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பிஜேபி செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளதே?

இது பத்திரிகைகளும், ஊடகங்களும் உருவாக்கிய புகார். இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது (வாய்விட்டு சிரிக்கிறார்).

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

READ ALSO :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top