August 9, 2020

Adrasakka

#1 Tamil News Website

சாத்தான்குளம் லாக்அப் கொலை ? : போலீசே புகார் கொடுத்து போலீசே நடவடிக்கை எடுத்த அவலம் !! – தட்டி கேக்க ஆள் இல்லையா ?

சாத்தான்குளம் லாக்அப் கொலை ? : போலீசே புகார் கொடுத்து போலீசே நடவடிக்கை எடுத்த அவலம் !! - தட்டி கேக்க ஆள் இல்லையா ?

சாத்தான்குளம் தந்தை மகன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது காவலர்கள் தாக்கி உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதில், விசாரணையின் பேரில் அழைத்துச் சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கியதில் ஜெயராஜும், பென்னீக்ஸும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார், இருவர் மீதும் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தது தெரிய வந்திருக்கிறது.

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தரையில் புரண்டு உருண்டதால் இருவருக்கும் ஊமை காயம் ஏற்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரது மீதும் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ல், “ ஜூன் 19ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஆகிய நான், காவல் நிலையத்தில் பொறுப்பில் இருக்கும் போது,

சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன் கொடுத்த புகார் மனுவைப் பெற்று, புகார் மனுவின் தன்மைக்கு ஏற்ப காவல்நிலைய குற்ற எண் 312/2020 u/s 188, 269, 294(b), 353, 506(ii) ஐபிசியாக வழக்குப் பதிவு செய்தேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தலைமைக் காவலர் அளித்த புகார் மனுவில், ஜூன் 19ஆம் தேதி இரவு 9.15 மணி அளவில் நானும் காவலர் முத்து ராஜும் கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக ரோந்து செய்து சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே வரும்போது,

சிலையின் வடபுறம் உள்ள ஏபிஜே மொபைல்ஸ் கடை அரசு அனுமதித்த நேரத்திற்குப் பிறகு அரசு உத்தரவை மீறி திறந்து இருந்தது.

கடையின் முன்பு உரிமையாளரான சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெயராஜும், அவரது மகன் பென்னீக்ஸ் என்பவரும் மற்றும் சிலரும் நின்று கொண்டிருந்தனர்.

LIVE | LIVE | வியாபாரிகள் மர்ம மரணம்: நீதி கிடைக்குமா?

LIVE | வியாபாரிகள் மர்ம மரணம்: நீதி கிடைக்குமா?

Geplaatst door News7Tamil op Woensdag 24 juni 2020

நாங்கள் அவர்களை கூட்டம் போட வேண்டாம் அமைதியான முறையில் வீட்டிற்குச் செல்லுங்கள் என்று சொன்னோம். அப்போது மற்றவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.

ஜெயராஜும் பென்னீக்ஸும் தரையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினர். அதோடு அவர்கள் தரையில் புரண்டதால் இருவருக்கும் ஊமைக் காயம் ஏற்பட்டது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் நாங்கள் மீண்டும் நேரமாகிவிட்டது கலைந்து செல்லுங்கள் என்று சொன்னதற்கு, ஜெயராஜும் பென்னீக்ஸும் எங்களைப் போகச் சொன்னால் உங்களை அடித்துக் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தார்கள்.

எனவே இவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து இந்த புகார் மனு கொடுக்கிறேன்.

போலீசை பணி செய்ய விடாமல் தடுத்துத் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைக் காவலர் முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு போலீசார் மீது மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

சாதாரண நபர் கொலை செய்தால் என்ன நடவடிக்கை காவல்துறை எடுக்குமோ அதே நடவடிக்கையை, எனது அப்பா, தம்பியை கொலை செய்த காவலர்கள் மீது எடுக்க வேண்டும் என்று ஜெயராஜூவின் மகள் பெர்சி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயராஜ் பென்னீக்ஸ் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இவ்விவகாரம் குறித்து கோயில்பட்டி நீதித்துறை நடுவர் பிரேத புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவர் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னீக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்,

மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top