September 23, 2020

Adrasakka

#1 Tamil News Website

கோவில் இருப்பதால் பள்ளிக்கூடம் கட்டக்கூடாது – அதிகாரிகளை மிரட்டிய ஹிந்து முன்னணி அமைப்பினர் !! அராஜகம் !!

கோவில் இருப்பதால் பள்ளிக்கூடம் கட்டக்கூடாது

திருவாரூர் மாவட்டம் கோட்டூருக்கு அருகில் உள்ள கிராமம் தான் காாியமங்கலம். இங்கு இருந்த தொடக்க பள்ளி கஜா புயலின் போது காற்றில் சேதமடைந்து பயன்படுத்த முடியாதநிலைக்கு சென்றது.

எனவே அந்த பள்ளி இருந்த இடத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

அப்போது அங்குவந்த ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் அருகாமையில் கோவில் இருக்கிறது, இங்கு பள்ளிக்கூடம் வந்தால் கோவிலுக்கு இடையூறாக இருக்கும்.

எனவே வேறு இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவஇடத்துக்கு காவல்துறையினர் வந்தனர்.

அப்போதும் அமைதி அடையாத ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த இடத்தில பள்ளிக்கூடம் கட்ட கூடாது. நாங்கள் சொல்லும் வேறு இடத்தில் தான் பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர்.

உடனே அங்கு இருந்த அதிகாரிகளோ , ” அரசு நிதி ஒதுக்கியுள்ள இந்த இடத்தில்தான் புதிய கட்டிடம் கட்டுவோம் ” என தெரிவித்தனர்.

நீண்டநேரவாக்குவாதத்திற்கு பிறகு ஆர் . டி . ஓ . தலைமையில் நாளை பேச்சு வார்த்தை நடத்தி , அதன்பிறகு பள்ளி கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top