August 9, 2020

Adrasakka

#1 Tamil News Website

ஊர் சுற்றியவரின் கைகால்களைக் கட்டி தூக்கிச்சென்ற சுகாதாரத் துறை !!

ஊர் சுற்றியவரின் கைகால்களைக் கட்டி தூக்கிச்சென்ற சுகாதாரத் துறை!

வெளிநாட்டிலிருந்து வந்து முகக்கவசத்தைச் சரியாக அணியாமல் சாலையில் சுற்றித் திரிந்த நபரை சுகாதாரத் துறையினர் கைகால்களைக் கட்டி ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

நாளுக்கு நாள் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா காலத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா புனித பீட்டர்ஸ் சந்திப்பு பகுதியில் ஒருவர் முகக் கவசத்தைச் சரியாக அணியாமல் சுற்றி திரிவதாகவும்,

யார் சொன்னாலும் அவர் கேட்க மறுப்பதாகவும் பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அவரைப் பிடித்து மேற்கொண்ட விசாரணையில், 43 வயதுடைய அந்த நபர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் குவைத்தில் இருந்து வந்தது தெரியவந்தது.

அத்துடன் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர், விதிகளை மீறி முகக்கவசத்தைச் சரியாக அணியாமல் சாலையில் திரிந்தது அறியப்பட்டது.

இதையடுத்து போலீஸார் கொடுத்த தகவலின்படி கவச உடையுடன் வந்த சுகாதாரத் துறையினரைப் பார்த்து தப்பிக்க முயன்ற அவரை விரட்டிப்பிடித்து,

கைகால்களைக் கட்டி ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

தற்போது அந்த நபர் எர்ணாகுளம் கோளஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர்மீது பத்தனம்திட்டா போலீஸார் கொரோனா ஒழிப்பு தனிமைப்படுத்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

READ ALSO :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top