June 2, 2020

Adrasakka

#1 Tamil News Website

இந்தியா மீது பொருளாதார தடை : மிரட்டும் அமெரிக்கா பயப்படும் இந்தியா ?

america threatens india

ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகள் வாங்கவுள்ள இந்தியா, பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து, 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, ‘எஸ்-400’ ரக அதிநவீன ஏவுகணைகளை வாங்க, கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது.

இதற்கு, முன்பணமாக, 6,000 கோடி ரூபாய் (800 மில்லியன் டாலர்), ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டது.

ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்குவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து, ரஷியாவிடம் இருந்து நீங்கள் ஏவுகணை வாங்கினால், பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது.

ஆனாலும் இந்தியா அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறியதாவது: அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டமான கேட்சா சட்டப்படி, ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து, ராணுவ தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.

ராணுவ தொழில்நுட்ப விவகாரங்களில், இந்தியா சில வாக்குறுதிகளை கடைபிடிக்கவில்லை எனில், பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியா அதிநவீன நிலை மற்றும் மிக உயர்ந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற நகர்கிறபோது, உண்மையில் அவர்கள் எந்த அமைப்பினுள் செயல்பட விரும்புகிறார்கள் என்பது கேள்வியாக மாறும்.

ஒரு கட்டத்தில் இந்தியா, தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களுக்கு ராணுவ ரீதியிலான உறுதிப்பாட்டை செய்ய வேண்டும். எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன.

ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகம் இப்போது 20 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1½ லட்சம் கோடி) தற்போது தாண்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறோம்.

அதற்கான பெருமை, தற்போதைய நிர்வாகத்துக்கு உண்டு. அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி சாதனங்கள் போன்றவற்றால் ஏற்படுகிற அச்சுறுத்தல்களை சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

என அவர் கூறினார்.

Read Also :

ADRASAKKA is really free and innovation respecting media, but we’re also completely funded by donations! Help us sustain the real media and continue to improve. Please Donate Us.

 
                       
error: Share this news via the link at the top